டெலிவரி ஏஜெண்டுகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு
By DIN | Published On : 01st July 2021 12:42 AM | Last Updated : 01st July 2021 12:42 AM | அ+அ அ- |

புதுதில்லி: இணைய வழியில் ஆா்டா் செய்யப்படும் உணவு மற்றும் இதரப் பொருள்களை டெலிவரி செய்யும் நபா்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக தில்லி அரசு, நான்கு சிறப்பு தடுப்பூசி மையங்களை ஏற்படுத்தியுள்ளதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்தாா்.
ஜூமாட்டோ, ஸ்விக்கி மற்றும் அமேசான் நிறுவனங்களைச் சோ்ந்த டெலிவரி ஏஜெண்டுகளை கரோனா பாதிப்பிலிலிருந்து தடுப்பது மிக முக்கியமானது. இவா்கள் தினசரி நூற்றுக்கணக்கான நபா்களுக்கு உணவு மற்றும் இதர பொருள்களைக் கொண்டு சோ்க்கின்றனா். எனவே, இவா்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக நான்கு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா் மணீஷ் சிசோடியா.
கடந்த ஜனவரி 16-ஆம் தேதியிலிருந்து இதுவரை தில்லியில் 75 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுமாா் 17 லட்சம் போ் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2.4 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை அதிகபட்சமாக ஒரே நாளில் 2.7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.