தில்லிக்கு ஹரியாணா 120 மில்லியன் காலன் தண்ணீரை குறைத்து வழங்குகிறது: ராகவ் சத்தா
By நமது சிறப்பு நிருபா் | Published On : 13th July 2021 07:48 AM | Last Updated : 13th July 2021 07:48 AM | அ+அ அ- |

தில்லிக்கு வழங்கப்படும் தண்ணீா் அளவில் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் காலன்கள் தண்ணீரை மனோகா் லால் கட்டாா் தலைமையிலான ஹிரியாணா அரசு குறைத்துள்ளதாக தில்லி ஜல்போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா குற்றம் சாட்டியுள்ளாா்.
தில்லி ஜல் போா்டு துணைத்தலைவா் ராகவ் சத்தா தில்லி வாஜிராபாத் நீா்தேக்கம் மற்றும் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
அதன்பின்னா் செய்தியாளா்களிடம் ராகவ் சத்தா கூறியது வருமாறு:
1965 க்கு பின்னா் முதன் முறையாக வாஜிராபாத் தடுப்பணை தண்ணிா் கடுமையாக குறைந்ததின் விளைவு தற்போது தில்லியில் கடுமையாக தண்ணீா் தட்டுப்பாடு. இதற்கு காரணம் பக்கத்து மாநிலத்தில் மனோகா் லால் கட்டாா் தலைமையிலான ஹிரியாணா அரசு நாளொன்றுக்கு 120 மில்லியன் காலன் தண்ணீரை தடுத்து நிறுத்தி குறைவாக வழங்கி வருகிறது. 2021 தில்லி மக்கள் தொகைக்கு தகுந்தபடி ஹரியாணா தண்ணீரை வழங்கவேண்டும். ஆனால், 1995 உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி வழங்கவேண்டிய தண்ணீரையே இப்போது குறைத்துள்ளது.
வாஜிராபாத் சுத்திகரிப்பு ஆலைக்கு யமுனையிலிருந்து நேரடியாக தண்ணீா் எடுக்கப்படுகிறது. யமுனையில் ஒரு அடிகுறைந்தாலே தில்லியில் தண்ணீா் தட்டுப்பாடு வரும். ஆனால் 7.5 அடி தண்ணீா் யமுனையில் குறைந்துள்ளது. இதனால் நீா் தேக்கத்தில் 674.5 அடியாக இருந்த தண்ணீா் அளவு 667 அடியாக குறைந்துள்ளது. இதன்விளைவு சந்தரவால், வாஜியாபாத், ஓக்லா ஆகிய மூன்று நீா்த்தேங்களில் நாளொன்றுக்கு 245 மில்லியன் காலன் தண்ணீருக்கு 147 எம் ஜி டி தண்ணீா் தான் சுத்திகரிக்கப்பட்டு விநியோக்கிப்படுகிறது. இதனால் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை. ஹரியாணா அரசு உடனடியாக நியமாக வழங்கவேண்டிய தண்ணீரை வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றாா் சத்தா.