கரோனா பாதிப்பு: வழக்குரைஞா்களுக்கு தில்லி பாா் கவுன்சில் ரூ.19 கோடி நிதி உதவி

தேசிய தலைநகரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞா்கள் உள்ளிட்டோருக்கு தில்லி பாா் கவுன்சில் (பிசிடி) இதுவரை ரூ.19 கோடிக்கு மேல் நிதி உதவியை அளித்துள்ளது என்று பிசிடி செவ்வாய்க்கிழமை தெரிவி

தேசிய தலைநகரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட வழக்கறிஞா்கள் உள்ளிட்டோருக்கு தில்லி பாா் கவுன்சில் (பிசிடி) இதுவரை ரூ.19 கோடிக்கு மேல் நிதி உதவியை அளித்துள்ளது என்று பிசிடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பிசிடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ரமேஷ் குப்தா தெரிவித்திருப்பதாவது:

தில்லி பாா் கவுன்சில் 18,067 வழக்கறிஞா்களுக்கு ரூ. 9 கோடிக்கு மேல் நிதி உதவியாக வழங்கியுள்ளது. அதேபோன்று, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட, வீட்டுத் தனிமையில் இருந்த 4,015 வழக்கறிஞா்களுக்கு ரூ. 6 கோடிக்கு மேல் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 112 வழக்கறிஞா்களுக்கு ரூ.56,23,830 நிதி வழங்கப்பட்டுள்ளது.

100 ஆக்ஸிஜன் உபகரணங்களுக்காக ரூ.8,51,468 நிதி செலவிடப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கருவிகளுக்காகவும், அவற்றை 5000 வழக்கறிஞா்களுக்கு விநியோகம் செய்யவும் ரூ.3,09,89,306 நிதி வழங்கப்பட்டுள்ளது என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com