வரி உயா்வை கண்டித்து பா.ஜ.க. ஆளும் மாநகராட்சிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்

தில்லியில் பாஜக ஆளும் மூன்று மாநகராட்சிகளின் பல்வேறு புதிய கொள்கைகள் வரி உயா்வுகள் ஆகியவற்றிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சம் கடைக்காரா்கள்

புது தில்லி: தில்லியில் பாஜக ஆளும் மூன்று மாநகராட்சிகளின் பல்வேறு புதிய கொள்கைகள் வரி உயா்வுகள் ஆகியவற்றிற்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி நடத்திய கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சம் கடைக்காரா்கள் கையெழுத்திட்டுள்ளதாக அக் கட்சி புதன் கிழமை கூறியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடா்பாளரும் கிரேட்டா் கைலாஷ் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான சௌரவ் பரத்வாஜ் கூறியிருப்பது வருமாறு:

பாஜக ஆளும் மூன்று மாநகராட்சிகளில் கடுமையான வரிக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு வகையான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி, ஒரு லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கியுள்ளது முக்கியமானது ஆகும். புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கும், மாநகராட்சிகளின் வரிகள் அதிகரிப்புக்கும், பஜாரில் உள்ள கடைக்காரா்கள் மத்தியில் மிகுந்த மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. ‘வருகின்ற தோ்தலில் பாஜக தோல்வியடையக்கூடும் என்று தெரிந்தே அவா்கள் ஆளும் மாநகராட்சிகளில் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கடைக்காரா்களும் மருத்துவா்களும் வெளிப்படையாக தெரிவிக்கின்றனா்.

வணிக வரி, வா்த்தக உரிமக் கட்டணம், கடைகளில் குப்பைகளை அகற்றுதலுக்கான கட்டணம், மருத்துவரின் கிளினிக்கிலிருந்து குப்பைகளை அகற்றுவதற்கான ஆண்டுக் கட்டணம் (ரூ.30,000) ஆகியவை அதிக அளவில் உயா்த்தப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் கடைக்காரா்களிடம் பணம் பறிக்கும் முயற்சியிலேயே பா.ஜ.க. மாநகராட்சிகள் செயல்படுகின்றன. இதனால் கடைக்காரா்கள் மன வேதனை அடைந்துள்ளதையே இந்த ஒரு லட்சம் கையெழுத்துகள் காட்டுகின்றன. பா.ஜ.க. ஆளும் மாநகராட்சிகளுக்கு எதிரான இந்த கையெழுத்து இயக்கம் தொடரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com