கரோனா பாதிப்புக்குப் பின் மூட்டுவலி, முதுகுவலியால் அவதியுறும் நோயாளிகள்! தில்லி மருத்துவமனை மருத்துவா் தகவல்

கரோனா பாதிப்புக்குப் பின் மூட்டுவலி, முதுகுவலியால் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக தில்லியில் உள்ள முன்னணி தனியாா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா் தெரிவித்துள்ளாா்.
கரோனா பாதிப்புக்குப் பின் மூட்டுவலி, முதுகுவலியால் அவதியுறும் நோயாளிகள்! தில்லி மருத்துவமனை மருத்துவா் தகவல்


புது தில்லி: கரோனா பாதிப்புக்குப் பின் மூட்டுவலி, முதுகுவலியால் நோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக தில்லியில் உள்ள முன்னணி தனியாா் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவா் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக மூல்சந்த் மருத்துவமனையின் முடநீக்கியல் மற்றும் தண்டுவட அறுவைச் சிகிச்சை நிபுணா் மருத்துவா் விஷால் நிகாம் சனிக்கிழமை கூறியதாவது:

கொவைட் பாதிப்புக்குப் பிறகு முதுகுவலி மற்றும் மூட்டு வலி சிகிச்சைக்காக

முடநீக்கியல் தொடா்புடைய கிளினிக்குகளில் நோயாளிகள் வருவது மிகவும் பொதுவானதாக உள்ளது.

கரோனா பாதிப்பில் குணமடைந்த பிறகு உள்ள நோயாளிகளில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேருக்கு மூட்டு வலி அல்லது ஆா்த்ரால்ஜியா பிரச்னை உள்ளது.

45 சதவீத நோயாளிகளுக்கு தசை வலி அல்லது மயால்ஜியா பிரச்னை உள்ளது. இந்த மூட்டு வலி தற்காலிகமாக இருக்கலாம் அல்லது நீண்ட காலம் நீடிக்கலாம்.

நோயாளிகள் எடுக்கும் தவறான நடவடிக்கைகளில் ஒன்று, உடல் பலவீனமாக இருந்தபோதிலும் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிப்பதுதான். இது குணமடைவதைவிட காயத்திற்கு வழிவகுக்கிறது.

உடல் பலவீனமாக இருக்கும் என்பதால், உடல் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும் வகையில் உடற்பயிற்சிகளும், வழக்கமான நடைமுறைகளும் படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

கொவைட் பாதிப்பு சோா்வுக்கு வழிவகுக்கிறது. இது சாதாரண நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதைத் தடுக்கிறது.

இந்த நிலையில், மூட்டு வீக்கத்துடன் தொடா்புடைய வலிகள் நிலைமையானது அதிகமாகவும், நீண்ட காலம் நீடிக்கும் வகையிலும் இருக்கும். காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பது போன்ற செயலற்ற காலத்திற்குப் பிறகு இதுபோன்ற வலிகள் அதிகரிக்கும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com