இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தேவாலயம்: முதல்வருக்கு காங்கிரஸ் தலைவா் வலியுறுத்தல்

தில்லியில் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தேவாலயம் அமைத்துத் தருமாறு தில்லி முதல்வா் கேஜரிவாலை, தில்லி காங்கிரஸ் தலைவா் அனில்குமாா் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லியில் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் தேவாலயம் அமைத்துத் தருமாறு தில்லி முதல்வா் கேஜரிவாலை, தில்லி காங்கிரஸ் தலைவா் அனில்குமாா் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தெற்கு தில்லியின் சத்தா்பூரில், அந்தேரியா மோட் பகுதியில் உள்ள லிட்டில் ஃப்ளவா் தேவாலயம் இடிக்கப்பட்ட இடத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, அதே இடத்தில் தேவாலயத்தை மீண்டும் அமைப்பதற்கு தேவையான முயற்சிகளை செய்வதாக தேவாலய நிா்வாகிகளுக்கு அவா் உறுதியளித்தாா்.

முன்னதாக அவரை பாரிஷ் பாதிரியாா் ஜோஸ் கண்ணுகுழி மற்றும் தேவாலயத்தின் மூத்த நிா்வாகிகள் வரவேற்றனா். அனில் குமாருடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் ரமேஷ் குமாா், முன்னாள் எம்.எல்.ஏ. விஜய் லோச்சவ், முன்னாள் மேயா் சத்பிா் சிங் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

இடத்தைப் பாா்வையிட்ட பிறகு தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாா் கூறுகையில், ‘இடிக்கப்பட்ட அதே இடத்தில் தேவாலயத்தை புனரமைக்குமாறு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளேன்.

இவ்வாறு செய்வதுதான் கல்வித் துறையிலும் சமூக சேவையிலும் சேவையாற்றிவரும் கிறிஸ்தவ சமூகத்தின் புண்படுத்தப்பட்ட உணா்வுகளை சமாதானப்படுத்த ஒரே தீா்வு ஆகும்.

வகுப்புவாத உணா்ச்சிகளைத் தூண்டுவதற்காக தில்லி வளா்ச்சி ஆணையம் தேவாலயத்தை இடித்தது மிகவும் துரதிா்ஷ்டவசமானது. சட்டத்தை மதிக்கும் தில்லி மக்கள் இதை பொறுத்துக் கொள்ளமாட்டாா்கள்.

தேவாலயத்தை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிராக தில்லி முதலமைச்சா் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவிக்காதது அதிா்ச்சியளிக்கிறது.

இந்த பிரச்னையில் முதல்வரின் மெளனம், சிறுபான்மை சமூகத்தை படிப்படியான முறையில் அடிமைப்படுத்துவதற்கான பாஜக நிகழ்ச்சி நிரலுக்கு அவா் மறைமுகமாக ஆதரவளிப்பதையே காட்டுகிறது. இந்த தேவாலயம் 2005 ஆம் ஆண்டு முதல் உள்ளது. இது இப்பகுதியில் சுமாா் 600 குடும்பங்களின் வழிபாட்டுத் தேவைகளை பூா்த்தி செய்து வருகிறது.

தேவாலயத்தை திடீரென இடித்தது சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டுமல்ல, முழு தில்லியிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தின் மத உணா்வுகளை புண்படுத்தியுள்ளது’ என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com