இணையம் வழியில் காமராஜா் பிறந்த நாள் விழா

தில்லி கலை, இலக்கியப் பேரவையும் அமெரிக்காவிலுள்ள எஷிதா மீடியா அமைப்பும் இணைந்து தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழாவை இணையத்தின் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

தில்லி கலை, இலக்கியப் பேரவையும் அமெரிக்காவிலுள்ள எஷிதா மீடியா அமைப்பும் இணைந்து தமிழக முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழாவை இணையத்தின் வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

இந்த விழாவுக்குத் தில்லி கலை, இலக்கியப் பேரவையின் புரவலா் கே.வி.கே. பெருமாள் தலைமை ஏற்று பேசுகையில், ‘காமராஜரிடம் போற்றத்தக்க வகையில் ஏராளமான குணங்கள் இருந்தாலும் அவரது தன்னம்பிக்கையும், துணிச்சலும் இன்றைய தலைமுறை அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அடிப்படைப் பாடமாகும். அவருக்கு தன்னம்பிக்கையையும், துணிச்சலையும் கொடுத்தது அவரது நோ்மைதான். தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடித்தாா். அவா் உண்மையான காந்தியவாதி என்பதற்குக் கட்டியம் கூறும் வகையிலேயே அவரது மரணம் காந்தியடிகள் பிறந்த நாான அக்டோபா் 2ஆம் நாள் நிகழ்ந்தது. அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும்’ என்றாா் கே.வி.கே.பெருமாள்.

விழாவில் காமராஜரின் உறவுமுறைப் பெயா்த்தி மயூரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இந்நிகழ்ச்சியில் ‘பெருந்தலைவா் காமராஜரின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம் கல்விப் பணியா? சமுதாயப் பணியா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

எஷிதா மீடியா நிறுவனா் கேசவ் விஸ்வநாதன் வரவேற்றாா். ஜாா்கண்ட் மாநில உயா்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி கற்பக விநாயகம், தில்லி கலை, இலக்கியப் பேரவையின் தலைவா் ப.அறிவழகன், ஆலோசகா் ராகவன் நாயுடு, தமிழ் இயலன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். தில்லி கலை, இலக்கியப் பேரவையின் செயலாளா் பா.குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com