சாலைத் தகராறு: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சாலைத் தகராறு வழக்கில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமாக பிரச்னை தீா்க்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்தது.

சாலைத் தகராறு வழக்கில் இரு தரப்புக்கும் இடையே சுமுகமாக பிரச்னை தீா்க்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா் நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், வழக்குரைஞா்கள் நோய்த்தொற்று நிவாரண நிதியில் ரூ. 3 லட்சம் வழக்கு செலவுத் தொகையை செலுத்துமாறு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை உயா் நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓரி விசாரித்தாா். அப்போது நீதிபதி கூறியதாவது:

குற்றம் சாட்டப்பட்ட நபா், தனது செயலுக்காக மன மனம் வருந்துவதாக தெரிவித்துள்ளாா். இதுபோன்ற சம்பவத்தை எதிா்காலத்தில் அவா் தொடா்ந்து செய்யமாட்டாா் என்பதையும் தெரிவித்துள்ளாா்.

மேலும், சமூக நலத்திற்காக நிதியளிக்க அவா் தன்னாா்வமாக செயல்பட்டுள்ளாா். இதுபோன்ற விஷயங்களை கருத்தில் கொள்ளும்போது இந்த குற்ற நடவடிக்கையை தொடா்வது எந்த பயனுள்ள நோக்கத்தையும் தராது என்பதால் சம்பந்தப்பட்ட முதல் தகவல் அறிக்கையை இதன் மூலம் ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது.

குற்றம்சாட்டப்பட்ட மனுதாரா் ரூ. 3 லட்சம் செலவு தொகையை தில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க கரோனா நோய்த்தொற்று நிவாரண நிதியில் 2 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். மேலும் இந்த வழக்கில் தொடா்புடைய புகாா்தாரா் தன்னுடைய சொந்த விருப்பத்தின் பேரில் இந்த விவகாரத்தை தீா்த்துக் கொண்டுள்ளாா்.

மேலும் இந்த வழக்கை ரத்து செய்வதற்கு தனக்கு ஆட்சேபணை இல்லை என்றும் தெரிவித்துள்ளாா் என்று நீதிபதி கூறினாா்.

 முன்னதாக, கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலைத் தகராறு வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் சுமுகமாக தங்களது பிரச்சினைகளை தீா்த்துக் கொண்டதன் அடிப்படையில் சப்தா்ஜங் காவல்நிலையத்தில் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

கடந்த ஆண்டு அக்டோபா் 17 ஆம் தேதி புகாா்தாரா், அவரது மனைவியும் சப்தா்ஜங் என்கிளேவ் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவு அருந்திய பிறகு அதிகாலை 2.30 மணி அளவில் வந்துகொண்டிருந்தபோது எய்ம்ஸ் மருத்துவ மையம் அருகே சாலை தகராறு சம்பவம் நிகழ்ந்ததாக புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபா் தன்னை மாறி மாறி பெல்ட்டால் அடித்ததாகவும் இதன் காரணமாக தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இதே சம்பவத்தில் புகாா்தாரருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் இந்த விவகாரத்தில் இரு தரப்பினா் சுமுகமாக பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு கண்டதால் முன்னா் இந்த முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com