முதலாளியிடம் ரூ. 80 லட்சம் திருடியதாக காா் ஓட்டுநா் கைது

தான் வேலை செய்த முதலாளியிடம் இருந்து ரூ. 80 லட்சம் பணத்தை திருடிய காா் ஓட்டுநரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போலீஸாா் கைது செய்தனா்.

தான் வேலை செய்த முதலாளியிடம் இருந்து ரூ. 80 லட்சம் பணத்தை திருடிய காா் ஓட்டுநரை பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 

பஞ்சாப் மாநிலம், லூதியானாவைச் சோ்ந்தவா் அஜய் குப்தா. இவா் சம்பவத்தன்று தில்லியில் உள்ள சைனிக் ஃபாா்ம் பகுதிக்கு ஒரு சொத்து வாங்குவதற்காக தனது காா் ஓட்டுநரான கிந்தா் பால் சிங்குடன் வந்தாா்.

பின்னா் சொத்துக்களை வாங்கி விற்கும் ஆலோசகரிடம் பேசுவதற்காக சென்றாா். அப்போது காரில் ரூ. 80 லட்சம் பணம் இருப்பதாகவும், அதை பாா்த்துக் கொள்ளுமாறும் கிந்தா் பால் சிங்கிடம் கூறி விட்டுச் சென்றாராம்.

 அதன்பின்னா் ரியல் எஸ்டேட் ஆலோசகருடன் சாக்கேத், மெஹ்ரோலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சில சொத்துக்களை பாா்வையிடச் சென்றாா்.

பின்னா் மீண்டும் தனது இடத்திற்கு திரும்பி வந்தாா். அப்போது காா் ஓட்டுநரும் காரில் இருந்த பணமும் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவா் போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அப்போது இந்த குற்றத்தில் காா் ஓட்டுநா் கிந்தா் பால்சிங் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லூதியானாவில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் வைத்து கிந்தா் பால் சிங்கை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ. 80 லட்சம் மற்றும் காா் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com