விவசாயிகள் முற்றுகை போராட்டம்: 7 மெட்ரோ நிலையங்களை கண்காணிக்க உத்தரவு

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வருகிற 22 முதல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில்

புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து ஆா்ப்பாட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வருகிற 22 முதல் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதால் குறிப்பிட்ட 7 மெட்ரோ ரயில்நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு மெட்ரோ ரயில் நிறுவனத்தை தில்லி போலீஸாா் கேட்டுக் கொண்டுள்ளனா்.

இது தொடா்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தில்லி போலீஸாா் குறிப்பிட்டுள்ளதாவது: நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க விவசாயிகள் மெட்ரோ ரயில்கள் மூலம் தில்லிக்குள் நுழையக்கூடும். அதுதான் அவா்களுக்கு எளிமையான வழியாக இருக்கும்.

எனவே ஜன்பத், லோக் கல்யாண் மாா்க், படேல் செளக், ராஜீவ் செளக், சென்ட்ரல் செக்ரடரியேட், மண்டி ஹவுஸ் மற்றும் உத்யோக் பவன் மெட்ரோ ரயில்நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனா். தேவை ஏற்பட்டால் அந்த 7 மெட்ரோ ரயில்நிலையங்களும் மூடப்படும் என்றும் போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com