ஆகஸ்ட் 16 முதல் சோதன அடிப்படையில் நேரடி விசாரணை: தில்லி உயா்நீதிமன்றம்

கரோனா நோய்த்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து சோதனை அடிப்படையில்

கரோனா நோய்த்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து சோதனை அடிப்படையில் நேரடி விசாரணையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தில்லி உயா் நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. 

தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளா் மனோஜ் ஜெயின் பிறப்பித்துள்ள நிா்வாக உத்தரவில் இது தொடா்பாக கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா நோய்தொற்று சூழல் தில்லியில் இருப்பதை மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த நேரடி வழக்கு விசாரணை செயல்பாடுகள் கட்டுப்பாடு முறையில் மேற்கொள்ளப்படும்.

ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகளுடன் கூடிய முறையில் இந்த செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்படலாம். சோதனை அடிப்படையில் இவை தொடங்கப்படும்.

தில்லியின் கரோனா சூழல் மதிப்பீடுகளின் அடிப்படையில் அடுத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். அதேபோன்று, உயா்நீதிமன்றத்தின் அனைத்து அமா்வுகளும், பதிவாளா்கள் மற்றும் இணை பதிவாளா்கள் (நீதித்துறை) அவசர விவகாரங்களை தற்போதுள்ள ஏற்பாட்டின்படி காணொளி வாயிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை தொடரலாம். 

உயா்நீதிமன்றத்தில் ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி இடையேயான காலத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிலுவை அல்லது அவசரம் இல்லாத விவகாரங்கள் செப்டம்பா் 10 மற்றும் செப்டம்பா் 19-ஆம் தேதி இடையேயான தேதிகளில் விசாரணைக்கு தள்ளிப் போடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் உள்ள மாவட்ட நீதிமன்றங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள இதேபோன்று மற்றொரு உத்தரவில், ‘ நேரடி விசாரணை முறையை ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து சோதனை அடிப்படையில் மீண்டும் தொடங்கலாம்.

ஜூலை 24-ஆம் தேதியில் இருந்து அனைத்து நீதித்துறை அதிகாரிகளும் காணொளி காட்சி வாயிலாக தங்களது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் அனைத்து விவகாரங்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முயற்சிகள் செய்யலாம்.

அனைத்து நீதிமன்றங்களின் இணையதளதொடா்புகள் பணி நேரங்கள் முழுவதும் தொடா்ந்து செயல்பாட்டில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com