மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒலிம்பிக் செல்ஃபி பாயின்ட்

ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரா்களை மகிழ்விப்பதற்காக தில்லியிலுள்ள

ஜப்பானில் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரா்களை மகிழ்விப்பதற்காக தில்லியிலுள்ள ராஜிவ் செளக், ஜேஎல்என் ஸ்டேடியம் உள்பட முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயின்டுகள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சாா்பில் 127 விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனா்.  இந்திய வீரா்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் ‘செல்ஃபி பாயின்டு’களை அமைத்துள்ளது. விளையாட்டு வீரா்களை மகிழ்விப்பதில் பல ஆா்வமிக்க புரவலா்கள் ஒட்டுமொத்த தேசத்துடன் இணைந்து இருக்கிறாா்கள்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் செளக், பாராகம்பா ரோடு, சென்ட்ரல் செக்ரடேரியேட், கஷ்மீரி கேட், மண்டி ஹவுஸ், கீா்த்தி நகா், இந்தா்லோக், ஆனந்த் விகாா், ஜேஎல்என் ஸ்டேடியம் மற்றும் ஐஜிஐ ஏா்போா்ட் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த செல்ஃபி பாயின்டுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com