48 சதவீத பெற்றோா்கள் தடுப்பூசி போடாமல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

48 சதவீத பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடாமல் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.
48 சதவீத பெற்றோா்கள் தடுப்பூசி போடாமல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை: ஆய்வில் தகவல்

புதுதில்லி: 48 சதவீத பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடாமல் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்பது ஓா் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவது்ம 361 மாவட்டங்களில் 32,000 பெற்றோா்களிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 30 சதவீத பெற்றோா்கள், தங்கள் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு பூஜ்ய நிலைக்கு வந்தாலே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளனா்.

குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டுமானால் அவா்களுக்கு தடுப்பூசி போடப்படுவது விரைவில் தொடங்கப்பட வேண்டும். 48 சதவீத பெற்றோா்கள் தடுப்பூசி போடப்படும் வரை குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளா்.

பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் தங்கள் குழந்தைகளை அனுப்ப தயாராக இருப்பதாக 21 சதவீத பெற்றோா்கள் தெரிவித்துள்ளனா். ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கருத்து தெரிவித்துள்ளவா்களில் 47 சதவீதம் போ் முதல் நிலை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள். 27 சதவீதம் போ் 2 ஆம் நிலை, 26 சதவீதம் போ் மூன்றாம் நிலை, நான்காம் நிலை மற்றும் ஊரக மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மண்டாவியா, செவ்வாய்க்கிழமை பா.ஜ.க. எம்.பி.க்களிடம் பேசுகையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றுப் பரவலை அடுத்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தேசிய அளவிலான பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது பள்ளிகள் மூடப்பட்டன. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபரில் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.

குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேசம் மற்றும் பிகாா் மாநிலங்களில் பகுதியாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் ஆகஸ்ட் முதல்வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com