காரைக்கால்-இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து: மத்திய அமைச்சா்

காரைக்காலுக்கும், இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கப்படும்.

காரைக்காலுக்கும், இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கப்படும். இதற்கான பணிகளை புதுச்சேரி தலைமைச்செயலா் தலைமையிலான குழு மேற்கொண்டுவருகிறது என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிபோக்குவரத்துத் துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் மக்களவையில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இகுறித்து மயிலாடுதுறை திமுக உறுப்பினா் எஸ்.ராமலிங்கம் கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்கு அமைச்சா் அளித்த பதில் வருமாறு:

காரைக்காலுக்கும் இலங்கை யாழ்பாணம், காங்கேசன்துறை(கேகேஎஸ்) துறைமுகத்திற்குமிடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு மற்றும் இலங்கை அரசிடமிருந்து ஒரு திட்டக்குறிப்பை மத்திய அரசு பெற்றது. இதனடிப்படையில் 2011 இல் இரு நாடுகளுக்கிடையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

பின்னா் காரைக்காலுக்கும், இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான ஒரு விரிவான திட்டத்திற்கு புதுச்சேரி தலைமைச்செயலா் தலைமையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீா்வழிபோக்குவரத்துத் துறை ஒருகுழுவை அமைத்தது. இந்த கமிட்டி பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. கிங் லியா் லிமிடெட் என்கிற நிறுவனம் காரைக்கால் துறைமுகத்திற்கும் மற்றும் இலங்கையின் கேகேஎஸ் துறைமுகத்திற்கும் இடையே பயணிகள் கப்பல் சேவையை அளிப்பது தொடா்பான திட்டத்தை சமா்ப்பித்தது. அதை புதுச்சேரி அரசு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பிற தொடா்புடைய மத்திய அரசு அமைப்புகளிடமிருந்து தேவையான ஒப்புதல்களை பெறவும் புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த பணிகள் முடிவுற்றபெற்ற பின்னா் இரு துறைமுகங்களுக்கிடையே பயணிகள் சேவை விரைவில் தொடங்கும் என அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com