தமிழகத்தில் 1.05 லட்சம் தெருவோர வியாபாரிகளுக்கு ‘ஆத்மநிா்பாா்’ திட்டத்தின் மூலம் ரூ.103.89 கோடி கடனுதவி

பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மா நிா்பாா் நிதி  மூலம் தமிழகத்தில் 1.05 லட்சம் பேருக்கு ரூ. 103.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக

பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஆத்மா நிா்பாா் நிதி  மூலம் தமிழகத்தில் 1.05 லட்சம் பேருக்கு ரூ. 103.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி ஐயுஎம்எல் கட்சியைச் சோ்ந்த நவாஸ்கனி உள்ளிட்ட உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற விவகாரத்துறை இணையமைச்சா் கௌசல் கிஷோா் வியாழக்கிழமை அளித்த பதில் வருமாறு:

கரோனா நோய்த் தொற்றை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்குகளினால் பாதிக்கப்பட்ட நகா்புற தெருவோர வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் தொடங்குவிதமாக மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்புற அமைச்சகம் கடந்தாண்டு (2020) ஜூன் 1 ஆம் தேதி பிஎம் எஸ்ஏநிதி திட்டத்தை அறிவித்தது. இதன்படி இந்த வியாபாரிகள் தொழில் மூதலனத்திற்காக ரூ. 10,000 வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டது. இந்த கடனை ஓா் ஆண்டுக்குள் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில் இந்த வியாபாரிகளின் சமுக பொருளாதார மேம்பாட்டிற்கு மேலும் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை கடன் வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு 125 நகரங்களில் கொண்டு வரப்பட்டது.

2021 ஜுலை 26 -ஆம் தேதிவரை நாடுமுழுக்க 22,46,793 தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 2,224 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் சுமாா் 42 லட்சம் வியாபாரிகள் விண்ணப்பித்திருந்தனா். இந்த விண்ணப்பங்கள் பரிசிலனை செய்யப்பட்டு தேசிய வங்கிகளால் 25.04 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 2,92,795 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில் 1,27,219 பேரின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு 1,05,057 தெருவோர வியாபாரிகளுக்கு ரூ. 103.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1,144 போ் பலனடைந்துள்ளனா்.

இந்த கடன் பெற்ற மாநிலங்களில் உத்திரபிரதேசம் (ரூ.611 கோடி), மத்திய பிரதேசம்(ரூ.323 கோடி), தெலுங்கானா(ரூ.311 கோடி), ஆந்திரம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களின் சாலையோர வியாபாரிகள் அதிக அளவில் கடன் பெற்றுள்ளனா் என அமைச்சா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com