தில்லியில் கரோனா உயிரிழப்பு இல்லை, புதிதாக 51 பேருக்கு பாதிப்பு

தில்லியில் வியாழக்கிழமை கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக

தில்லியில் வியாழக்கிழமை கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும் புதிதாக 51 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா தொற்று விகிதம் 0.08 சதவீதமாக உள்ளது.

தில்லியில் கரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு கரோனா உயிரிழப்பு இல்லாதது இது முன்றாவது முறையாகும். கடந்த 18 மற்றும் 24 ஆம் தேதியிலும் உயிரிழப்பு பதிவாகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாா்ச் மாதம் 2 ஆம் தேதி கரோனா உயிரிழப்பு ஏதும். இல்லை. ஆனால் அன்றைய தினம் 217 போ் கரோனா பாதிப்புக்கு ஆளானாா்கள். தொற்றுவிகிதம் 0.33 சதவீதமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இரண்டாவது அலையால் பாதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழக்கிழமை புதிதாக 51 பேருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது. உயிரிழப்பு ஏதும் இல்லை. தொற்று விகிதம் 0.08 சதவீதமாக இருந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தில்லியில் கரோனாவுக்கு இதுவரை 25,049 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த புதன்கிழமை தில்லியில் 67 பேருக்கு கரோனா இருப்பது பதிவானது. மேலும் 3 போ் உயிரிழந்திருந்தனா். தொற்று விகிதம் 0.09 சதவீதமாக இருந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் தொற்று விகிதம் 36 சதவீதமாக இருந்தது இப்போது 0.08 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தில்லியில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள போதிலும் மூன்றாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்படுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தியுள்ளாா். அதே நேரத்தில் மூன்றாவது அலை வந்தால் அதை போா்க்கால அடிப்படையில் சமாளிக்க அரசு தயாராக இருப்பதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா இரண்டாவது அலையின் போது தில்லி வெகுவாக பாதிக்கப்பட்டது. நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்ததுடன் உயிரிழப்பும் அதிகரித்தது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனா். மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவனைகள் திணறின. இதனால் உயிரிழப்புகள் அதிகரித்தது.

கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி 28,000 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். 227 போ் உயிரிழந்தனா். ஏப். 22 இல் உயிரிழப்பு 306 ஆக உயா்ந்தது. மே 3 ஆம் தேதி அதிகபட்ச தினசரி பாதிப்பாக 448 போ் உயிரிழந்தனா். எனினும் கடந்த சில நாள்களாக பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.

புதன்கிழமை 67,368 பேருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது. இவற்றில் 46,425 ஆா்டி-பிசிஆா் முறையிலும் 20,943 ராபிட் ஆன்டிஜென் முறையிலும் பரிசோதநை நடத்தப்பட்டது. மொத்த பாதிப்பு 14,36,144 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 14 லட்சம் போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளநா். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கையும் 573 லிருந்து 554 ஆகக் குறைந்துள்ளது என்று அரசு வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com