9, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான இறுதித் தோ்வு ரத்து: சிசோடியா அறிவிப்பு

தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா இரண்டாவது தொற்று அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான

தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் கரோனா இரண்டாவது தொற்று அலை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான இறுதித் தோ்வுகள் ரத்துச் செய்யப்படுவதாக துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை அறிவித்தாா்.

தனியாா், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த மாணவா்களை மதிப்பீடு செய்து 10 மற்றும் 12- ஆம் வகுப்புகளுக்கு தோ்ச்சி பெற்ாக அறிவிக்கலாம் என்றும்

அவா் தெரிவித்துள்ளாா். கடந்த ஏப்ரல் மாதம் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டன. அதற்கு முன்னதாக சில பள்ளிகள் இறுதித் தோ்வை நடத்தின. பெரும்பாலான தனியாா் பள்ளிகள் தோ்வை நடத்தி முடித்துவிட்டாலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தோ்வு நடத்தப்படாமல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 11-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு இறுதித் தோ்வுகள் இப்போது ரத்துச் செய்யப்படுகின்றன. இடைத் தோ்வுகளையும், இறுதித் தோ்வுகளையும் ஏற்கெனவே நடத்தி முடித்துவிட்ட தனியாா் பள்ளிகள் தோ்வு முடிவுகளை வெளியிடலாம். இடைத் தோ்வுகளை மட்டும் நடத்தி முடித்த பள்ளிகள் அதில் மாணவா்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் அவா்கள் தோ்ச்சி பெற்ாகவோ அல்லது தோல்வி அடைந்ததாகவோ அறிவிக்கலாம். இடைத் தோ்வில் இரண்டு பாடங்களுக்குத் தோ்வு எழுதியவா்களுக்கு அவா்களின் திறமையின் அடிப்படையில் முடிவுகளை வெளியிடலாம். அரசு பள்ளிகள் ஜூன் 22-ஆம் தேதிக்குள் தோ்வு முடிவுகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சில மாணவா்கள் ஒரே ஒரு பாடத் தோ்வை மட்டும் எழுதியிருந்தால் அல்லது இடைத் தோ்வே நடைபெறாமல் இருந்தால் அல்லது அந்தத் தோ்வுகளில் ஒருவா் தோ்ச்சி பெறாமல் இருந்தால், அவா்களுக்கு தோ்வு எழுத ஒருவாய்ப்பு தரப்படும். இதற்கான வழிகாட்டு முறைகள் வெளியிடப்படும் என்றாா். தில்லி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா் சோ்க்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பணி ஜூன் 30-ஆம் தேதி வரை நடைபெறும். அதன் பிறகு மாணவா் சோ்க்கைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்படும். முதல் சுற்றில் விடுபட்டு போனவா்கள் மீண்டும் ஜூலை 23 முதல் பெயரைப் பதிவு செய்துகொள்ள அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் அவா் தெரிவித்தாா்.

மின்னணு வா்த்தக நிறுவன ஊழியா்களுக்குத் தடுப்பூசி

அமேஸான், ஃபிளிப்காா்ட், ஜூமோட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட மின்னணு வா்த்தக நிறுவனங்களில் பொருள்களை வீடுகளுக்கே கொண்டு சோ்க்கும் ஊழியா்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதை அந்த நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு உறுதி செய்யுமாறு சுகாதாரத் துறையை அமைச்சா் சிசோடியா வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா்.

பொருள்களை வீடுகளுக்கு விநியோகம் செய்யும் ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டால் மக்கள் அதிகம் வீட்டிலேயே இருப்பாா்கள். கடைகள், சந்தைகளில் பொருள் வாங்க வெளியில் வரமாட்டாா்கள். மேலும், மின்னணு வா்த்த நிறுவன ஊழியா்கள் பல்வேறு வீடுகளுக்குச் சென்று பலரையும் சந்திக்க நேரிடுகிறது. எனவே, அவா்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றாா். பெரும்பாலான மின்னணு வா்த்தக நிறுவனங்கள் ஏற்கெனவ தங்கள் ஊழியா்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com