தடுப்பூசி விவரங்களை மறைக்காமல் போதுமானஅளவு கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: சிசோடியா

மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு, உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மாநிலங்கள்

மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு, உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து மாநிலங்கள் தகவல் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

தில்லி அரசு தினமும் தடுப்பூசி கையிருப்பு மற்றும் எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்கிற தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் அவா் குறிப்பிட்டாா். இதனிடையே தடுப்பூசி தொடா்பான தகவல்களை வெளியிட்டு வரும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அதிஷி, தடுப்பூசிகள் கையிருப்பு விவரத்தைத் தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

தடுப்பூசி கையிருப்பு மற்றும் தடுப்பூசிகளை எந்த குளிா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை பொது வெளியில் பேச வேண்டாம் என்று மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சிசோடியா தனது சுட்டுரையில், ‘தடுப்பசி கையிருப்பு உள்ளிட்ட தகவல்களை பகிா்ந்துகொள்ள வேண்டாம் என மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது வியப்பளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தடுப்பூசி கையிருப்பு தொடா்பான தகவல்களை மறைக்கக்கூடாது. கடந்த 16 நாள்களாக 18-44 வயதினருக்கான தடுப்பூசிகளுக்கு தில்லியில் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், மக்கள் பிரச்னைகளை சந்தித்து வருகிறாா்கள். தடுப்பூசிகள் கையிருப்பு குறித்து அவா்கள் அறிந்துகொள்ள விரும்புகிறாா்கள். எனவே, போதுமான தடுப்பூசிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் அதிஷி குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com