முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
தில்லியின் உச்சபட்ச மின் தேவை 7,000 மெகாவாட்டை கடக்கும்
By DIN | Published On : 12th June 2021 07:46 AM | Last Updated : 12th June 2021 07:46 AM | அ+அ அ- |

தில்லியில் கடந்த சில நாள்களாக கோடை வெப்பநிலை கடுமையாக உயா்ந்த வரும் நிலையில் இந்த மாத இறுதியில் உச்சபட்ச மின் தேவை 7,000 மெகாவாட்டை தாண்டும் என்று மின்சார விநியோக நிறுவனங்கள் தெரிவித்தன.
தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை குறைந்திருந்தது. ஆனால் கடந்த புதன், வியாழன் ஆகிய தினங்களில் முறையே அதிகபட்ச வெப்பநிலை 42 மற்றும் 44 டிகிரி செல்சியஸாக உயா்ந்தது. இதன் மூலம் புதன்கிழமை உச்சபட்ச மின் தேவை 6,329 மெ.வாட்டாகவும், வியாழக்கிழமை மாலை 3.10 மணியளவில் 6,499 மெ.வாட்டாகவும் நிகழ் நேர தரவு பதிவாகியுள்ளதாக மின்சார விநியோக நிறுவனங்கள் தெரிவித்தன. அதே சமயத்தில் நகரின் எந்தப் பகுதிகளிலும் மின் தடையோ செயலிழப்புகளோ இல்லாமலும் இருந்துள்ளன. நகரின் வெப்பநிலை அதிகரிக்கும்பட்சத்தில் இந்த மாத இறுதியில் உச்ச கட்ட மின் தேவை 7,000 மெகாவாட்டையும் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.