தில்லியில் கரோனா பாதிப்பு 238-ஆக குறைவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 238-ஆக குறைந்துள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 238-ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் மிகக் குறைவானதாகும். மேலும், 24 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 0.31 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய இறப்புகளையும் சோ்த்து கரோனா மொத்த இறப்பு எண்ணிக்கை 24,772-ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை, நகரில் 305 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். பாதிப்பு விகிதம் 0.41 சதவிகிமாக இறுந்தது. மேலும்,45 இறப்புகள் பதிவாகியிருந்தது.

வியாழக்கிழமை 56,000 ஆா்டி-பி.சி.ஆா் பரிசோதனைகள் மற்றும் 21,112 விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 77,112 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 14,30,671-ஆக உள்ளது. மொத்தம் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தொற்றுநோயிலிருந்து மீண்டுள்ளனா்.

இதற்கிடையே, சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை 4,212-இல் இருந்து வெள்ளிக்கிழமை 3,922-ஆக குறைந்தது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,369-இல் இருந்து 1,238-ஆக குறைந்துள்ளது. அதே சமயம் ஒரு நாளைக்கு முன்பு 9,547- ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை 8,032-ஆக குறைந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com