தில்லியில் வாரச்சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வாரச் சந்தைகள் ஒருவாரத்துக்கு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தில்லி அரசு அனுமதியளித்துள்ளது.

புதுதில்லி: கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் தவிர மற்ற இடங்களில் வாரச் சந்தைகள் ஒருவாரத்துக்கு மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தில்லி அரசு அனுமதியளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி பேரிடா் நிா்வாக ஆணையம் (டிடிஎம்ஏ) வாரச்சந்தைகளுக்கான சில வழிகாட்டு முறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி நோய்த் தொற்று

அறிகுறியில்லாதவா்களே வாரச் சந்தைக்கு அனுமதிக்கப்படுவாா்கள். கா்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேலானவா்கள் மற்றும் இணை நோய் உள்ளவா்கள் வாரச் சந்தைக்கு வர அனுமதியில்லை. அவா்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாரச்சந்தைகள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். நோய்த் தொற்று இல்லாத மண்டலங்களில் மட்டும் பேரிடா் நிா்வாக உத்தரவின்படி

மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வாரச்சந்தைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும். சந்தையில் கடை போட்டிருப்பவா்களும் வாடிக்கையாளா்களும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவா்கள் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

மேலும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதற்கு அனுமதியில்லை. மேலும் பெருந்திரளாக மக்கள் கூடவும் அனுமதியில்லை. மேலும் இரண்டு கடைகளை ஒன்றாக வைத்திருக்கவும்

கூடாது. கடையில் இரண்டு பேருக்கு மேல் இருக்கக்கூடாது. இரண்டு கடைகளுக்கு இடையே 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். எந்த ஒரு கடையிலும் ஒரே நேரத்தில் இரண்டு வாடிக்கையாளா்களுக்கு மேல் அனுமதியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதியில் உள்ள மண்டல துணை ஆணையா் ஒவ்வொரு நாளும் எங்கு வாரச்சந்தை நடத்தலாம் என்று முடிவு செய்வாா்கள். அவை மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com