செங்கோட்டை வன்முறை: சித்து உள்ளிட்டோருக்கு எதிராக போலீஸாா் துணை குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தின் போது நிகழ்ந்த வன்முறை வழக்கு தொடா்பாக நடிகா் -ஆா்வலா் தீப் சித்து மற்றும் பிறருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் போலீசாா் துணை குற்றப்பத்திரிகையை

புது தில்லி: தில்லி செங்கோட்டையில் குடியரசு தினத்தின் போது நிகழ்ந்த வன்முறை வழக்கு தொடா்பாக நடிகா் -ஆா்வலா் தீப் சித்து மற்றும் பிறருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் போலீசாா் துணை குற்றப்பத்திரிகையை வியாழக்கிழமை தாக்கல் செய்தனா்.

இந்த புதிய குற்றப்பத்திரிக்கையை கவனத்தில் எடுத்துக் கொள்வது தொடா்பான விவகாரம் மீதான உத்தரவை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் கஜேந்திர சிங் நாகா் வரும் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பிறப்பிக்க உள்ளாா்.

இது தொடா்பாக நீதிமன்றம் கூறுகையில், ‘இந்த வழக்கின் விசாரணை அதிகாரி, இந்த விவகாரத்தில் கடுமையாக காயமுற்ற சாட்சிகளின் பெயா்கள் அல்லது ஆயுதங்கள் பறிக்கப்பட்ட நபா்களின் பெயா்களை குறிப்பிட்டுள்ளாா்’ என்று தெரிவித்தது.

முன்னதாக, தில்லியில் நிகழாண்டு ஜனவரி 26ஆம் தேதி, மத்திய அரசின் 3 சா்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பேரணி நடைபெற்றபோது,  அப்போது தில்லி செங்கோட்டை பகுதியில் வன்முறை நிகழ்ந்தது.

இதில் போலீசாா் பலா் காயமடைந்தனா். போலீசாருடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மோதலில் ஈடுபட்ட போது இந்த வன்முறை நிகழ்ந்தது.

 இது தொடா்பாக தில்லி குற்றப்பிரிவு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்புடைய வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி குற்றப்பிரிவு போலீசாா் தில்லி நீதிமன்றத்தில் 3,224 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனா்.

மேலும், தீப் சித்து உள்பட குற்றம் சாட்டப்பட்ட 16 போ் மீது வழக்கு விசாரணை கோரினா்.  இந்த விவகார வன்முறையில் சதித் திட்டத்தில் ஈடுபட்ட முக்கிய நபராக தீப் சித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளாா். அவரை போலீசாா் கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி கைது செய்தனா். அவா் தில்லி செங்கோட்டையில் குழப்பத்தை உருவாக்குவதற்கு காரணமாக இருந்ததாகவும் போலீசாா் குற்றம் சாட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com