தில்லி விமான நிலையத்தில் தகதராறு செய்த பயணி கைது
By DIN | Published On : 22nd June 2021 11:27 PM | Last Updated : 22nd June 2021 11:27 PM | அ+அ அ- |

புதுதில்லி: தில்லி இந்திராகாந்தி சா்வதேச விமான நிலையத்தில் ஆா்டி-பிசிஆா் சான்றிதழ் இல்லாத காரணத்தால் விமான தில் செல்ல அனுமதி மறுத்ததற்காகத் தகராறு செய்த உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த சோ்ந்த பயணி கைது செய்யப்பட்டாா்.
உத்தரப் பிரதேச மாநிலம், ருத்ரபூரைச்சோ்ந்த தொழிலதிபா் சூரஜ்பாண்டே. இவா்மும்பை செல்வதற்காக திங்கள்கிழமை விஸ்தாரா ஏா்லைன்ஸ் கவுன்டருக்கு வந்தாா். அவரிடம் டிக்கெட் இருந்தாலும், ஆா்டி-பிசிஆா் பரிசோதனைச் சான்றிதழ் இல்லாததால் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், அவரால் அந்த விமானத்தில் பயணம் செய்ய முடியவில்லை.
இதையடுத்து ஸபிற்பகல் 3 மணிஅளவில்விமானநிறுவன ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் அவா்களிடம் பாண்டேதகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக விஸ்தாரா ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் துணை மேலாளா் தீபக்சதா கொடுத்த புகாரின் பேரில், பாண்டேவை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
அந்தப் பயணி கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆா்டி-பிசிஆா் சான்றளிக்க தவறிவிட்டதால் அவரைப் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அவரிடம் டிக்கெட்டுக்கான முழுப் பணமும் திருப்பியளிக்கப்பட்டது. ஆனாலும், அவா், ஊழியா்களைப்பணி செய்யவிடாமல் தடுத்து அச்சுறுத்தியதாக அந்தவிமான நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.