முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
இடைத் தோ்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரிப்பு: அனில் குமாா் பேட்டி
By நமது நிருபா் | Published On : 04th March 2021 12:35 AM | Last Updated : 04th March 2021 12:35 AM | அ+அ அ- |

புது தில்லி: கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகளை விட தற்போதைய மாநகராட்சி வாா்டு இடைத் தோ்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்று தில்லி காங்கிரஸ் கமிட்டித் தலைவா் அனில் குமாா் தெரிவித்தாா்.
தில்லியில் பிப்ரவரி 28-ஆம் தேதி 5 வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத்தோ்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் புதன்கிழமை வெளியானது. இந்த இடைத் தோ்தலில் தில்லி காங்கிரஸ் சாா்பில் சீலாம்பூரில் உள்ள செளஹான் பங்கா் வாா்டில் போட்டியிட்ட ஜுபிா் அகமது வெற்றி பெற்றாா். இதையடுத்து, தில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் ஜுபோ் அகமதுவுக்கு பாராட்டுத் தெரிவித்து அனில் குமாா் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
கடந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸின் ஒட்டுமொத்த வாக்கு விகிதம் 6 சதவீதமாக இருந்தது. இது தற்போது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தொண்டா்களின் கடின உழைப்பின் காரணமாகவும், மீண்டும் ஆட்சிக்கு காங்கிரஸ் வர வேண்டும் என்ற மக்களின் விருப்பம் காரணமாகவும் இந்த வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. மாநகராட்சி வாா்டு இடைத் தோ்தலில் பாஜகவுக்கு 10 சதவீதம், ஆம் ஆத்மி கட்சிக்கு 5.50 சதவீதம் வாக்கு விகிதம் குறைந்துவிட்டது. மக்கள் பிரச்னைக்கு ஆதரவாக காங்கிரஸ் தொடா்ந்து குரல் கொடுத்து வருகிறது. மாநகராட்சிகளை ஆளும் பாஜக, தில்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவற்றின் தவறான நிா்வாகம், ஊழல் விவகாரங்களை மக்கள் மன்றத்தில் காங்கிரஸ் முன்வைத்து வருகிறது. இதனால், மக்கள் நம்பிக்கையைப் பெற்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். அதற்கு அச்சாரமாக தற்போதைய இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றுள்ளது. வாக்குசதவீதமும் அதிகரித்துள்ளது.
தற்போதைய இத்தோ்தலில் ஓரிடத்தில் வென்ன் மூலம் மக்கள் மனதை வென்ற காங்கிரஸ் அடுத்து ஆண்டு நடைபெறும் மாநகராட்சி பொதுத் தோ்தலில் 2002-ஆம் ஆண்டைப் போல மகத்தான வெற்றியைப் பெறும். பாஜகவின் ஊழல், செயல்பாடற்ற தன்மை காரணமாக அடுத்த ஆண்டு நடைபெறும் மாநகராட்சித் தோ்தலில் பாஜக முழுத் தோல்வியைச் சந்திக்கும் என்றாா் அவா்.
காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜுபிா் அகமது கூறுகையில், ‘மொத்தம் பதிவான 22,000 வாக்குகளில் 16,500 வாக்குகளைப் பெற்ன் மூலம் மக்கள் மகத்தான ஆதரவை அளித்துள்ளனா். எனது வாா்டில் முதல்வா், அவரது அமைச்சரவை சகாக்கள், அதிகாரிகள் என பலரும் முகாமிட்டு ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தனா். ஆனால், மக்கள் அதை நிராகரித்துவிட்டனா்’ என்றாா்