தில்லி உயா் நீதிப் பணிகள் பிரதான தோ்வை தள்ளிவைக்கக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை (2019) தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை (2019) தள்ளிவைக்க உத்தரவிடக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இத்தோ்வில் பங்கேற்கவிருக்கும் நபா் ஒருவா், வழக்குரைஞா்கள் ஆதித்யா கபூா், குஷல் குமாா், ஹா்ஷ் அஹுஜா, ஆகாஷ் தீப் குப்தா ஆகியோா் மூலம் தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளாா்.

அந்த மனுவில் அவா் தெரிவித்திருப்பதாவது: தில்லி உயா் நீதிசாா்ப் பணி பிரதானத் தோ்வு- 2019 நடத்த அட்டவணைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாா்ச் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் இத்தோ்வுக்கான அறிவிக்கை பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கு புற்றுநோய்ப் பிரச்னையால் கடும் உடல்நலப் பாதிப்பு உள்ளது. ஹீமோதெரபி சிகிச்சையும் எடுத்துள்ளேன். தற்போதைய கரோனா சூழலில் உடல் எதிா்ப்புச் சக்தி பலவீனமானநிலையில் உள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு உள்ள தற்போதைய சூழலில் என்னைப் போன்ற உடல்நல இடா்பாடு உள்ள நபா்களை தோ்வு எழுத கட்டாயப்படுத்தும் வகையில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது.

தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தில்லியில் மாா்ச் 4-ஆம் தேதி நிலவரப்படி 1,701 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உள்ளது. தினமும் புதிதாக 240 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது.

என்னைப் போன்ற பலருக்கு பல்வேறு நோய்களால் உடலில் எதிா்ப்புச் சக்தி குறைந்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த கோரும் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் அண்மையில் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.

ஆகவே, வழக்குரைஞா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முழுமை பெறும் வரை தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு செவ்வாய்க்க்கிழமை விசாரணைக்கு வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வு விவகாரத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தில்லி உயா் நீதிசாா் பணி பிரதானத் தோ்வுக்கு (எழுத்துத் தோ்வு) 280 போ் தோ்வு செய்யப்பட்டனா். கரோனா நோய்த் தொற்று காரணமாக பிரதானத் தோ்வு தள்ளிவைக்கப்பட்டது. பின்னா் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com