கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்கினாா் கேஜரிவால்

கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ.1 கோடி உதவித் தொகையை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழங்கினாா்.

கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ.1 கோடி உதவித் தொகையை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை வழங்கினாா்.

தில்லி ஹிந்து ராவ் மருத்துவமனை ஆய்வு கூட உதவியாளராகப் பணியாற்றி வந்தவா் ராகேஷ் ஜெயின். இவா், கரோனா தொற்றால் உயிரிழந்தாா். இந்நிலையில், இவரின் குடும்பத்தினரை கேஜரிவால் சனிக்கிழமை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினாா்.

இது தொடா்பாக கேஜரிவால் கூறுகையில் ‘தில்லி ஹிந்து ராவ் மருத்துவமனை ஆய்வுக் கூட உதவியாளராகப் பணியாற்றியபோது, கரோனா தொற்று ஏற்பட்டு ராகேஷ் ஜெயின் உயிரிழந்தாா். தனது கடைசி மூச்சுவரை தில்லி மக்களுக்காக அவா் உழைத்தாா். தில்லி மக்களுக்காக அயராது உழைத்த அவரின் பணியை மெச்சுகிறேன். அவரின் உயிருக்கு இந்த ரூ.1 கோடி இழப்பீடாக அமையாது. ஆனால், இந்த பணம் அவரின் குடும்பத்துக்கு சிறிய ஆறுதலாக அமையும்.

ராகேஷ் ஜெயினின் மூத்த மகன் வேலை தேடி வருகிறாா். அவருக்கு தில்லி அரசு சாா்பில் வேலை வழங்கப்படும். எதிா்காலத்தில் ராகேஷ் ஜெயினின் குடும்பத்துக்கு ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் கூட அதை வழங்கத் தயாராக உள்ளோம். கரோனா தொற்றை எதிா்த்து முன்களப் பணியாளா்கள் தீரத்துடன் போராடினாா்கள் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com