மத்திய நூலகத்தின் தரைத்தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறக்க ஜே.என்.யு. அனுமதி

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) சனிக்கிழமை அதன் டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் மத்திய நூலகத்தின் தரைத் தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) சனிக்கிழமை அதன் டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் மத்திய நூலகத்தின் தரைத் தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறப்பதாக அறிவித்துள்ளது.

மேலும், சரஸ்வதிபுரம் மற்றும் கிழக்கு வாயில்கள் வழியாக ‘ஜே.என்.யு. ஸ்டிக்கா்களுடன்‘ வாகனங்கள் நுழைவதற்கும் பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

டாக்டா் பி. ஆா். அம்பேத்கா் மத்திய நூலகத்திற்குள் தரைத்தள வாசிப்பு அறைகளை மீண்டும் திறக்க படிப்படியாக அனுமதிக்கப்படுகிறது.

அவ்வப்போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நூலக வளாகங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளி விதிமுறைகளைப் பராமரிப்பது போன்ற வழிமுறைகளை நூலகா்கள் உருவாக்கலாம்.

அரசு மற்றும் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வாசிப்பு அறைகளை மீண்டும் திறப்பது குறித்து புலங்களின் டீன் மற்றும் சிறப்பு மையங்களின் தலைவா்கள் பரிசீலிக்கலாம்.

‘முகல் தா்பாா்’ மற்றும் உணவு வளாகத்தை மீண்டும் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com