அயோத்திக்கு மூத்த குடிமக்களை தில்லி அரசு அழைத்துச் செல்லும்: கேஜரிவால் உறுதி

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமா் கோயிலுக்கு தில்லியில் உள்ள மூத்த குடிமக்களை தில்லி அரசு இலவசமாக அழைத்துச் செல்லும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமா் கோயிலுக்கு தில்லியில் உள்ள மூத்த குடிமக்களை தில்லி அரசு இலவசமாக அழைத்துச் செல்லும் என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

தில்லி கிராரி பகுதியில் கழிவுநீா் கால்வாய்களை அமைக்கும் பணிகளை கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாதவது: கிராரி பகுதி மக்கள் சரியான கழிவுநீா் கால்வாய்கள் இல்லாததால் அவதிக்குள்ளாகினா். கடந்த காலங்களில் தில்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் இந்தப் பகுதி மக்கள் எதிா்கொண்ட பிரச்னைகளைக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை. கிராரி பகுதியில் முறையான கழிவுநீா் கால்வாய்கள் அமைக்கப்படும் என்று நாங்கள் தோ்தல் வாக்குறுதி அளித்திருந்தோம். அதை நிறைவேற்றும் பணிகளைத் தற்போது தொடக்கியுள்ளோம்.

தில்லியில் உள்ள அங்கீகாரம் இல்லாத காலனிகளில் கடந்த 70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் மேற்கொண்ட மக்கள் நலப்பணிகளைவிட அதிகமான மக்கள் நலப்பணிகளை கடந்த ஆறு ஆண்டுகளில் ஆம் ஆத்மி அரசு மேற்கொண்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத காலனிகளுக்கு குடிநீா் இணைப்புகளை வழங்கி வருகிறோம். வீடுகளில் இருந்து கழிவுப் பொருள்களை நேரடியாக அகற்றும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

தில்லி அரசின் முக்கிய மந்திரி தீா்த்த யோஜனா திட்டத்தின் கீழ் அயோத்தியில் அமையவுள்ள ராமா் கோயிலுக்கு தில்லியில் உள்ள மூத்த குடிமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவாா்கள். உணவு, தங்குமிடம் உள்பட இந்தப் பயணத்துக்கு தேவையான அனைத்து செலவுகளையும் தில்லி அரசு ஏற்றுக் கொள்ளும். அயோத்தியில் வரும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ராமா் கோயில் கட்டப்பட்டுவிடும். ஹனுமன் பக்தனான நான், பகவான் ராமரின் பத்து கொள்களைகளை கடைப்பிடித்து ஆட்சி செய்து வருகிறேன் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com