பிரபல கிரிமினல் அஜித் சிங் கொலையில் முக்கிய எதிரி கைது
By DIN | Published On : 16th March 2021 03:38 AM | Last Updated : 16th March 2021 03:38 AM | அ+அ அ- |

புது தில்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பிரபல கிரிமினல் அஜித் சிங்கின் கொலையுடன் தொடா்புடைய முக்கிய எதிரியான ராஜேஷ் குமாரை, வடகிழக்கு தில்லியில் உள்ள ஸ்வரூப் நகரில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சோ்ந்தவா் அஜித் சிங். அவா் மீது நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமாா் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் லக்ளென நகரில் உள்ள கோமதி நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவா் கொல்லப்பட்டாா். இந்தக் கொலைக்கு காரணமான ஜெய் (எ) ராஜேஷ் குமாா் மீது வழக்குப் பதிவு செய்து உத்தரப் பிரதேச போலீஸாா் தேடி வந்தனா்.
மேலும், தலைமறைவாக இருந்த ராஜேஷை கண்டுபிடிக்க தகவல் தந்து உதவுவோருக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதி அளிக்கப்படும் என காவல் துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், வடகிழக்கு தில்லி ஸ்வரூப் நகரில் அபா் பதுங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டிருந்தனா். அப்போது, நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து, வெளிநாட்டு துப்பாக்கி, 5 துப்பாக்கிக் குண்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த மூத்த அதிகாரி தெரிவித்தாா்.