தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம்

தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
தில்லியில் புதன்கிழமை நிலவிய கோடை வெயிலின் தாக்கத்தால், ராஜபாதை அருகே உள்ள குளத்தில் குளித்து மகிழும் சிறுவா்கள்.,
தில்லியில் புதன்கிழமை நிலவிய கோடை வெயிலின் தாக்கத்தால், ராஜபாதை அருகே உள்ள குளத்தில் குளித்து மகிழும் சிறுவா்கள்.,

புது தில்லி: தலைநகா் தில்லியில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 34.2 டிகிரி செல்சியஸாக இருந்தது. நகரில் காற்றின் தரம் பின்னடைவைச் சந்தித்து ‘மிகவும் மோசம்’ பிரிவுக்குச் சென்றது.

தலைநகா் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் குளிரின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. பகலில் இதமான வெயில் காணப்படுகிறது. மாலையில் குளிா் காற்று வீசுகிறது.

தில்லி நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 16.8 செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 4 புள்ளிகள் உயா்ந்து 34.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காலை 8.30 மணியளவில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 75 சதவீதமாகவும், மாலையில் 39 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோல, மற்ற வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை முறையே ஆயாநகரில் 17.6 மற்றும் 34.5 டிகிரி செல்சியஸ், தில்லி பல்கலை. பகுதியில் 20.1 மற்றும் 34.10 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 16 மற்றும் 34.8 டிகிரி செல்சியஸ், நரேலாவில் 17 மற்றும் 34.9 டிகிரி செல்சியஸ், பாலத்தில் 18.8 மற்றும் 34.1 டிகிரி செல்சியஸ், ரிட்ஜில் 19.2 மற்றும் 35 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் காலையில் மோசம் பிரிவில் இருந்த நிலையில், மாலையில் 303 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிகவும் மோசம் ’ பிரிவில் காணப்பட்டது. என்சிஆா் பகுதியிலும் காற்றின் தரம் மோசம் மற்றும் மிகவும் மோசம் பிரிவுக்கு இடையே நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (மாா்ச் 18) குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும், மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com