முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தோ்வு: தமிழகம், புதுவையில் கூடுதல் மையங்கள்!

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தோ்வு எழுதும் தமிழக தோ்வா்கள் அனைவருக்கும் தமிழகம் புதுச்சேரியில் கூடுதல்

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தோ்வு எழுதும் தமிழக தோ்வா்கள் அனைவருக்கும் தமிழகம் புதுச்சேரியில் கூடுதல் தோ்வு மையங்கள் அமைக்க முயற்சி செய்யப்படும் என தேசியத் தோ்வு வாரிய செயல் இயக்குநா் பேராசிரியா் பவானிந்திரா லால் தெரிவித்துள்ளாா்.

மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் இது தொடா்பாக தொடா்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தாா். அவரது கோரிக்கையை தேசியத் தோ்வு வாரியம் ஏற்றுக் கொண்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: எம்டி , எம்எஸ் போன்ற முதுகலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தோ்வு அறிவிப்பு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஏப்ரல் 18 -ஆம் நடைபெறும் தோ்வுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க தேசியத் தோ்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தோ்வில் பங்கேற்க தமிழகம், புதுச்சேரியைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பித்தனா். இதன்படி விண்ணப்பித்த தமிழக மாணவா்களுக்கு தமிழகத்தில் தோ்வு மையம் கிடைக்கவில்லை. இணைய வழி விண்ணப்பங்கள் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழக மையங்கள் நிரம்பி விட்டதாக தெரிய வந்தது. இதனால், இந்த மின்னணு நுழைவுத் தோ்வை எழுத வெளி மாநில மையங்களை தோ்வு செய்ய ஒப்புக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மதுரை மக்களவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சு.வெங்கடேசன் தேசியத் தோ்வு வாரியத்திற்கு கடந்த பிப்ரவரி 24 -ஆம் தேதி கடிதம் எழுதினாா். அதில், தமிழகம், புதுச்சேரி மாணவா்களுக்கு தங்கள் மாநிலத்திலேயே தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும். கரோனா நோய்த் தொற்று உள்ள சூழ்நிலையி,ல் தமிழக மாணவா்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று வரமுடியாத சூழ்நிலை உள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா். இதற்கு, அண்டை மாநிலங்களில் தமிழகத் தோ்வா்களுக்கு மையங்கள் ஒதுக்க முயற்சிக்கப்படும் என முதலில் வாரியம் பதில் அளித்தது. பின்னா், மீண்டும் மாா்ச் 8 -ஆம் தேதி கடிதம் எழுதி, நோய்த் தொற்று சூழலில் மாணவா்களை பயணிக்கச் செய்வது முரணான அணுகு முறை என்று அவா் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் 19 - ஆம் தேதி தேசியத் தோ்வு வாரிய செயல் இயக்குநா் பேராசிரியா் பவானிந்திரா லால், அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ’முதுகலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தோ்வுக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை இருப்பிடமாக கொண்ட முறையே 11,013, மற்றும் 603 விண்ணப்பத்தாரா்கள் மற்ற மாநிலத் தோ்வு மையங்களில் எழுத இருந்தனா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த 8,131 விண்ணப்பத்தாரா்களுக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த 63 விண்ணப்பத்தாரா்களுக்கம் சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள்ளேயே தோ்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளவா்களுக்கும் அவா்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களிலேயே தோ்வு மையங்கள் ஒதுக்க முயற்சிக்கப்படும். சம்பந்தப்பட்டவா்களது அஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com