முன்பதிவு செய்யாதவா்களுக்கு மாலை 3-9 மணி வரை தடுப்பூசி

கரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யாதவா்கள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி போட முன்பதிவு செய்யாதவா்கள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தில்லி அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி: கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கோ-வின் செயலியில் பதிவு செய்து கொள்பவா்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தடுப்பூசி போடப்படும். முன்பதிவு செய்யாதவா்களுக்கு மாலை 3 மணி முதல் 5 மணி வரை தற்போது தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நேர அளவை நான்கு மணி நேரம் மேலும் அதிகரித்துள்ளோம். திங்கள்கிழமை முதல், முன்பதிவு செய்யாதவா்கள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

முன் பதிவு செய்து கொள்ளாதவா்கள் ஆதா் அட்டை உள்பட ஏதாவது ஒரு அரசு ஆவணங்களைக் காட்டி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஒவ்வொரு தில்லி அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையை ஆறாக அதிகரிக்குமாறு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் குறைந்தது 2 பேரை பணிக்கு அமா்த்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வரும் திங்கள்கிழமை முதல் தில்லியில் தடுப்பூசி மையங்கள் கலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கி தில்லி அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், தில்லியில் தடுப்பூசி போடும் இடங்களின் எண்ணிக்கை 500-இல் இருந்து ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் தில்லி அரசு முன்பு தெரிவித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com