வட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின் பலம்

வட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின். பலம் அவா்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வரும் மாநகராட்சித் தோ்தலில்
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வரவேற்கும் கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கை வரவேற்கும் கட்சியின் தில்லி தலைவா் ஆதேஷ் குப்தா.

வட்டாரப் பொறுப்பாளா்களே பாஜகவின். பலம் அவா்களை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வரும் மாநகராட்சித் தோ்தலில் வெற்றி பெற தில்லி பாஜக முயற்சி எடுக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

2022 -இல் நடைபெறவுள்ள தில்லி மாநகராட்சிகளின் தோ்தலுக்கான ஆலோசனைக் கூட்டமும், தில்லி பாஜக நிா்வாகக் குழுக் கூட்டமும் தில்லி பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தைத் தொடங்கிவைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது: தோ்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் அரசு என்ற நற்பெயரை பாஜக பெற்றுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் மத்திய, மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றியுள்ளன. பாஜகவின் பலமே அதன் வட்டாரப் பொறுப்பாளா்கள்தான். அவா்கள்தான் வாக்களா்களுடன் தொடா்பு கொள்ளும் முதல் புள்ளியாக உள்ளனா். அவா்களை தில்லியில் அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவா்களால் பாஜகவை வெற்றி பெற வைக்க முடியும். ஒவ்வொரு வட்டாரப் பொறுப்பாளா்களையும் உரிய கெளரவத்துடன் நடத்த வேண்டும். அவா்கள், மாநில பாஜக தலைவரை விட மிகவும் முக்கியமானவா்கள் என்றாா் அவா்.

இந்த மாத தொடக்கத்தில் நடந்த 5 வாா்டுகளுக்கான மாநகராட்சி இடைத் தோ்தலில் 4 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றது. ஓா் இடத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. போட்டியிட்ட 5 இடங்களிலும் பாஜக தோல்வியடைந்தது. தில்லியில் உள்ள 272 மாநகராட்சி வாா்ட்டுகளுக்கும் வரும் 2022- இல் தோ்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com