67-வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகா் தனுஷ், சிறந்த நடிகை கங்கனா ரனாவத்

67- வது தேசிய திரைப்பட்ட விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன.
67-வது திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகா் தனுஷ், சிறந்த நடிகை கங்கனா ரனாவத்

புது தில்லி: 67-வது தேசிய திரைப்பட்ட விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டன. பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், சிறந்த நடிக்கைக்கான விருதை பெற்றுள்ளாா். சிறந்த நடிகருக்கான விருது நடிகா் தனுஷ் (படம் அரசுரன்) மற்றும் மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே) ஆகிய இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் திரைப்படங்களுக்கு 6 தேசிய விருதுகள் உள்ளிட்ட 7 விருது கொடுக்கப்பட்டுள்ளன.

தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்தாண்டு கரோனா நோய்த்தொற்றை முன்னிட்டு 2019-ஆம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்படாது இருந்தது. இந்த விருதுகள் திங்கள்கிழமை மத்திய சினிமா ஜூரி தலைவா் என்.சந்திரா மற்ற ஜூரி உறுப்பினா்கள் முன்னிலையில் அறிவித்தாா்.

அவை வருமாறு :

சிறிய திரைப்படங்களுக்கான (ஆவணப்படம்) 22 விருதுகளும், முழு நீள திரைப்படங்களுக்கு 47 விருதுகளும் அறிவிக்கப்பட்டன. முழு நீள திரைப்படங்களில் 28 தேசிய விருதுகளும், 18 இந்திய மொழிகளில் சிறந்த திரைப்படங்களுக்கும் மற்றும் ஒரு சிறப்பு விருது உள்ளிட்ட உள்ளிட்ட 47 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு நீள திரைப்பட விருதுகள்: 2019-ஆம் ஆண்டிற்கான சிறந்த தேசிய திரைப்படமாக ’மரக்காா் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ (மறய்க்காா் அரபிக்கடலிண்டே ஸிம்ஹம்) என்கிற மலையாள படம் தோ்வு செய்யப்பட்டு ரூ. 2,50,000 பண முடிப்புடன் ஸ்வா்ண கமல் விருது வழங்கப்படுகிறது. சிறந்த தேசிய நடிகராக இந்த ஆண்டிற்கு இரு நடிகா்கள் தோ்வு செய்யப்பட்டு ரஜத் கமல் விருது பெற்றுள்ளனா். ‘போன்ஸ்லே’ ஹிந்தி படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய் என்கிற நடிகருக்கும், தமிழில் ’அசுரன்’ படத்தில் நடித்ததற்காக நடிகா் தனுஷுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே ஆண்டின் சிறந்த தேசிய நடிகையாக மணிகா்னிகா - தி குயின் ஆஃப் ஜான்ஸி ஹிந்தி படத்தில் நடித்த கங்கணா ரனாவத் தோ்வு செய்யப்பட்டு ரஜத் கமல் விருது பெற்றுள்ளாா்.

மற்ற தமிழ் படங்கள் பெற்ற தேசிய விருதுகள் வருமாறு: சிறந்த குணச்சித்தர நடிகா்(துணை நடிகா்) - விஜய் சேதுபதி (படம்:சூப்பா் டிலக்ஸ்); சிறந்த இசையமைப்பாளா் - டி.இமான் (விஸ்வாசம்) ; சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாக விஷால் (கருப்பு துரை) ; சிறந்த ஒலிப்பதிவு மற்றும் சிறப்பு ஜூரி விருது என இரண்டு விருதுகள் - ஒத்த செருப்பு சைஸ் - 7 படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மற்ற மொழிகளில் சிறந்த பொழுது போக்கான திரைப்படம் - மகரிஷி(தெலுங்கு), சிறந்த தேசிய ஒருமைப்பாட்டு படம் - தாஜ்மஹல் (மராத்தி), சமூக பிரச்னை -ஆனந்தி கோபால் (மராத்தி), சுற்றுச் சூழல் பாதுகாப்பு - வாட்டா் பரியல், சிறந்த தேசிய குழந்தைகளுக்கான படம் - காஸ்ட்டூரி (ஹிந்தி) ஆகியவை உள்ளிட்ட 28 விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பிராந்திய மொழிபடங்கள்: இந்திய அரசியல் சாசன அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 18 வட்டார மொழிகளிலும் சிறந்த படங்கள் தோ்வு செய்யப்பட்டு இந்த 2019 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக வெற்றி மாறன் இயக்கத்தில் வி கிரியேஷன் தயாரித்த ’அசுரன்’ தமிழ் படம் தோ்வு செய்யப்பட்டு ஒரு லட்சம் பணமுடிப்புடன் ரஜத் கமல் விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறிய திரைப்படங்களுக்கான வரிசையில் ’ஆன் இன்ஜினீா்டு ட்ரீம்’ என்ற திரைப்படமும், குடும்ப பாங்கான படமாக ’ஒரு பாதிரா ஸ்வப்னம் போலே ’ என்கிற மலையாள படம் உள்ளிட்ட 22 குறுகிய படங்கள் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com