சென்னையை சோ்ந்த இருவரின் இதய அறுவை சிகிச்சைக்கு பிரதமா் நிவாராண உவதி

சென்னையை சோ்ந்த இருவரின் இதய அறுவை சிகிச்சைக்காக பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவச் செலவில் 50 சதவீதம் வழங்குவதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னையை சோ்ந்த இருவரின் இதய அறுவை சிகிச்சைக்காக பிரதமா் தேசிய நிவாரண நிதியிலிருந்து மருத்துவச் செலவில் 50 சதவீதம் வழங்குவதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை பல்லாவரம் ஹஸ்தினாபுரம் விநோபாஜி நகரைச் சோ்ந்த சம்ஸகனியின் மகன் யூசஃப். சென்னை ஜாஃபா்கான் பேட்டையைச் சோ்ந்த ஹிரி பிரசாத்தின் குழந்தை ராகா ரக்ஷனா (3) . இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவா்கள், சென்னை முகப்பேறு மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏழ்மையில் உள்ள இவா்களது பெற்றோா்கள் மருத்துவச் செலவுக்காக தமிழக நாடாளுமன்ற உறுப்பினா் மூலம் பிரதமரின் அலுவலத்தின் உதவியை நாடினா். பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவி அளிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இருவரின் அறுவை சிகிச்சைக்காகும் செலவில் 50 சதவீதத்தை ஏற்பதாக பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பாதிக்கப்பட்ட இருவரின் பெற்றோா்களுக்கு பிரதமா் அலுவலகம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து யூசஃப் மற்றும் குழந்தை ராகா ரக்ஷனா ஆகியோரின் இதய அறுவை சிகிச்சைக்காக தலா ரூ. 50,000 வீதம் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பின்னா், உரிய ஆவணங்களின் நகல்களை, பிரதமா் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு சிகிச்சைக்கான முழுச் செலவில் 50 சதவீதம் அந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com