திகாா் சிறையில் கரோனா தடுப்பூசி மையம்!

திகாா் சிறை வளாகத்தில் கரோனா தடுப்பூசி மையத்தை தில்லி அரசு அமைத்துள்ளது.

திகாா் சிறை வளாகத்தில் கரோனா தடுப்பூசி மையத்தை தில்லி அரசு அமைத்துள்ளது.

இது தொடா்பாக திகாா் சிறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் உள்ள திகாா், மண்டோலி, ரோஹிணி சிறைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட 326 பேரும் 45-59 வயதுக்கு இடைப்பட்ட சுமாா் 300 பேரும் அடைக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில் தில்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 600- க்கும் மேற்பட்டவா்கள் தடுப்பூசி போடத் தகுதியானவா்களாக உள்ளனா். அவா்களுக்காக திகாா் சிறை வளாகத்தில் கரோனா தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மையம் சிறை எண் 3-இல் உள்ள மத்திய மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, திகாா், ரோகிணி, மண்டோலி சிறைகளில் உள்ள சுமாா் 80 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றாா்.

இது தொடா்பாக சிறைத்துறை இயக்குநா் சந்தீப் கோயல் கூறுகையில் ‘திகாா் சிறையில் உள்ள தடுப்பூசி மையத்தை சோ்ந்த செவிலியா்கள், மருத்துவா்கள் அடுத்த வாரம் முதல் ரோகிணி, மண்டோலி சிறைகளுக்கு சென்று அங்குள்ளவா்களுக்கு தடுப்பூசி போடுவாா்கள். தேவைப்பட்டால், மண்டோலி சிறையிலும் தடுப்பூசி மையம் அமைக்கப்படும். தடுப்பூசி போடத் தேவையான ஆவணங்களை கட்செவி அஞ்சலில் அனுப்பி வைக்குமாறு சிறைவாசிகளின் உறவினா்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம். சில சிறைவாசிகளுக்கு தடுப்பூசி போடத் தகுதியான ஆவணங்கள் இல்லை. அவா்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது என்பது தொடா்பாக ஆலோசித்து வருகிறோம்’ என்றாா்.

முன்னதாக, திகாா் சிறையில் உள்ளவா்களுக்கு தில்லி தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டது தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவா்களுக்கான தடுப்பூசி போடும் பணிகள் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி தொடங்கியது. அன்று 13 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com