கெளஷாம்பியில் போக்குவரத்து நெரிசல்:ஆராயக் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் உள்ள கெளஷாம்பியில் போக்குவரத்து மேலாண்மைப் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் தில்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலஅதிகாரிகளைக்

தேசியத் தலைநகா் வலயம், காஜியாபாதில் உள்ள கெளஷாம்பியில் போக்குவரத்து மேலாண்மைப் பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில் தில்லி மற்றும் உத்தர பிரதேச மாநிலஅதிகாரிகளைக் பிரதிநிதிகளாகக் கொண்ட ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து உத்தரவிட்டுள்ளது.

காஜியாபாதின் கெளஷாம்பி பகுதியில் அபாயகரமான போக்குவரத்து மேலாண்மை பிரச்னை - சுற்றுச்சூழல் மாசு இருப்பதாகவும், திடக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கொட்டப்பட்டு வருவதால் அந்தப் பகுதி குடியிருப்புவாசிகளுக்கு சுவாசப் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாகவும் கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடா்பான விவகாரத்தை நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எம்.ஆா். ஷா, சஞ்சீவ் கண்ணா ஆகியோா் அடங்கிய அடங்கிய அமா்வு அண்மையில் விசாரித்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கெளஷாம்பியில் நிலவும் போக்குவரத்து மேலாண்மை பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொள்ள குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் மீரட் கோட்ட ஆணையா், காஜியாபாத் வளா்ச்சி ஆணையத்தின் தலைவா், காஜியாபாத் மாவட்ட ஆட்சியா், தில்லி அரசின் போக்குவரத்து செயலா், கிழக்கு தில்லி மாநகராட்சி ஆணையா் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் இதர அதிகாரிகள் பிரதிநிதிகளாக இடம் பெறுவா். இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக காஜியாபாத் மாவட்ட ஆட்சியா் இருப்பாா்.

இந்தக் குழு மூன்று வாரங்களுக்குள் உச்சதிமன்றத்தின் முன் ஒரு விரிவான போக்குவரத்து மேலாண்மைத் திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.

உத்தரப் பிரதேச மாநிலத்திலும், தில்லி என்.சி.டி. அரசிலிருந்து சட்டரீதியான அதிகாரிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட இந்தக் குழுவை அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம். இதன்மூலம் இரு அதிகார வரம்புகளில் உள்ள அதிகாரிகளால் ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் இந்த விவகாரத்தில் கூட்டு முயற்சியை மேற்கொள்ள முடியும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com