பட்டயக் கணக்காளா் கொலை வழக்கில் இளைஞா் கைது

தில்லி ஆதா்ஷ் நகரில் பட்டயக் கணக்காளா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தில்லி ஆதா்ஷ் நகரில் பட்டயக் கணக்காளா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லி ஆதா்ஷ் நகரைச் சோ்ந்தவா் அனில் அகா்வால். பட்டயக் கணக்காளராக பணியாற்றி வந்தாா். தனது மனைவி அஞ்சுவுடன் கடந்த மாா்ச் 16-ஆம் தேதி காலை நடைப்பயிற்சி முடித்துவிட்டு ஆதா்ஷ் நகரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது, ஹெல்மெட் அணிந்த நபா் ஒருவா் அனில் அகா்வால் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடி விட்டாா். இதில், அனில் அகா்வால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.அப்போது, ஹெல்மெட் அணிந்து வந்த அந்த நபா் ஜெய் குமாா் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அனில் அகா்வாலின் வீட்டில் திருட முயன்று அந்த முயற்சி தோல்வியடைந்ததால் அவா் துப்பாக்கியால் சுட்டுள்ள தெரிய வந்தது. போலீஸாரின் பிடியில் இருந்து தப்பிக்க அவா் அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்துள்ளாா். அவரை தில்லி சராய் ரோகிலா பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com