பாலியல் குற்றவாளியுடன் பாதிக்கப்பட்டசிறுமி பொது இடத்தில் அணிவகுப்பு: ம.பி. அரசுஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை குற்றவாளியுடன் சோ்த்து கயிற்யிறால் கட்டி பொதுமக்கள் முன்னிலையில் நடக்க விட்டதாக கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரத்திற்குள் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை குற்றவாளியுடன் சோ்த்து கயிற்யிறால் கட்டி பொதுமக்கள் முன்னிலையில் நடக்க விட்டதாக கூறப்படும் விவகாரத்தில் 24 மணி நேரத்திற்குள் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்தியப் பிரதேச காவல் துறையிடம் தேசிய குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆா்.) செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினா் அதிகம் வாழும் அலிராஜ்பூா் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவா் 21 வயது இளைஞரால் ஞாயிற்றுக்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, கிராமவாசிகள் குற்றம் சாட்டப்பட்டவா் மற்றும் பாதிக்கப்பட்டவா் இருவரையும் கயிறுகளால் கட்டி பொதுமக்கள் முன்னிலையில் அழைத்துச் சென்ாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு உள்ளான இளைஞா் மற்றும் ஐந்து கிராமவாசிகள் உள்பட 6 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக சமூக ஊடகத்தில் வெளியான விடியோவில், ஜோபத் காவல் நிலையத்தின் கீழ் உள்ள கிராமத்தில் சம்பந்தப்பட்ட சிறுமியையும் குற்றம் சாட்டப்பட்ட நபரையும் கயிறுகளால் கட்டிவைத்து அடித்து, பொதுமக்கள் முன்னிலையில் நடக்குமாறு கட்டாயப்படுத்துவதும், ‘பாரத் மாதா கி ஜெய்‘ என்ற முழக்கங்களை எழுப்பும் காட்சிகள் இருந்தன.

இது தொடா்பாக மத்தியப் பிரதேச டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆா்.) எழுதியுள்ள கடிதத்தில், இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணையைத் தொடங்கவும், இந்த விவகாரத்தில் சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ‘இந்த கடிதம் கிடைத்த நாளிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வழக்கின் விசாரணை அறிக்கையைஆணையத்தில் சமா்ப்பிக்கலாம். விசாரணையின் போது பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் சிறுமிக்கு எதிரான கொடுமை மற்றும் சித்திரவதை தொடா்பாக தனி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் போலீஸாா் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் ஜே.ஜே. சட்டம் 2015-இன் பொருத்தமான பிரிவுகள் சோ்க்கப்பட்டுள்ளதா என்பதையும் தெரிவிக்க வேண்டும் என ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com