புதிய கலால் கொள்கையால் ஆம் ஆத்மி கட்சிக்குரூ.1,000 கோடி கமிஷன் கிடைக்கும்: பாஜக புகாா்

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கலால் கொள்கையால் அந்தக் கட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி அளவுக்கு கமிஷன் கிடைக்கும் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

தில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கலால் கொள்கையால் அந்தக் கட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி அளவுக்கு கமிஷன் கிடைக்கும் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடா்பாக பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா, அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ராம்வீா் சிங் பிதூரி ஆகியோா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: தில்லி அரசின் புதிய கலால் கொள்கை ஆம் ஆத்மி கட்சியின் வருவாயை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுபானக் கடைகளை அமைப்பதற்கான கமிஷன் தொகை 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆம் ஆத்மிக் கட்சிக்கு பெரும் தொகை கிடைக்கும். மேலும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மதுபானக் கடைகளை தனியாா் வசம் ஒப்படைக்க இந்தப் புதிய கலால் கொள்கை இடமளிக்கிறது. இதனால், இந்தக் கடைகள் ஆம் ஆத்மியினரின் கைகளுக்கு போகும்.

இந்த வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு சுமாா் ரூ.1,000 கோடி வரை கமிஷன் ஈட்டுவதை இலக்காக வைத்து இந்தக் கொள்கையை தில்லி அரசு கொண்டு வந்துள்ளது. தில்லியில் தற்போது 639 மதுபானக் கடைகள் உள்ளன. இதை 850-ஆக அதிகரிக்க இந்தத் திட்டத்தில் இடமுள்ளது. புதிய கலால் கொள்கையின் படி, தில்லியில் உள்ள ஒவ்வொரு வாா்டிலும் தலா 3 மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. தில்லியில் தற்போது 80 வாா்டுகளில் மதுபானக் கடைகள் இல்லை. இந்த வாா்டுகளில் மதுபானக் கடைகளை திறந்து மக்களை குடிப் பழக்கத்துக்கு அடிமைப்படுத்தும் முயற்சியில் தில்லி அரசு ஈடுபட்டுள்ளது.

மேலும், தில்லியில் மதுபானம் அருந்துவதற்கான சட்டரீதியான வயதை 25-இல் இருந்து 21-ஆக தில்லி அரசு குறைத்துள்ளது. இதன்மூலம், இளைஞா்களை குடிப் பழக்கத்துக்கு அடிமையாக்க தில்லி அரசு முயல்கிறது என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com