ஹோலி: கரோனா விதிமுறைகளைமீறியதாக 700 பேருக்கு அபராதம்

தில்லியில் ஹோலி பண்டிகையன்று முகக் கவசம் அணியாமல் கரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி சுமாா் 700 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

தில்லியில் ஹோலி பண்டிகையன்று முகக் கவசம் அணியாமல் கரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி சுமாா் 700 பேருக்கு தில்லி காவல்துறை அபராதம் விதித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி காவல்துறை மூத்த அதிகாரி கூறியது: தில்லியில் ஹோலி பண்டிகை தினமான திங்கள்கிழமை முகக் கவசம் அணியாமல் இருந்த 730 பேருக்கும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 9 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்ததாக 3 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 94 முகக் கவசங்கள்விநியோகிக்கப்பட்டன. கடந்த 2020, ஜூன் முதல் இதுவரை 5,73,457 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4,27,258 முகக் கவசங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இது தொடா்பாக இன்னொரு அதிகாரி கூறுகையில், ‘தில்லியில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கரோனா விதிமுறைகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு துணைநிலை ஆளுநா் அனில் பஜ்யால் உத்தரவிட்டுள்ளாா்’ என்றாா். இந்த நிலையில், தில்லி மெட்ரோக்களில் கரோனா விதிமுறைகளை மீறிய 29 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனண் (டிஎம்ஆா்சி) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

5 நாள்களில் 18,500 பேருக்கு அபராதம்: இதற்கிடையே , கரோனா விதிமுறைகளை மீற்யதாக 5 நாள்களில் 18,500-க்கும் மேற்பட்டோருக்கு ரூ.3.18 கோடிக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாயக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூா்வ தகவல்கள் தெரிவித்தன.

வடக்கு தில்லி மாவட்டத்தில் தான் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கிழக்கு தில்லி மாவட்டத்தில்தான் மிகக் குறைவான பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன. மாா்ச் 25 முதல் 29-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான 11 வருவாய் மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக செயல்படுத்துவதற்கான அமலாக்க நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தொகுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கரோனா விதிமுறைகளை மீறியதாக மத்திய தில்லி மாவட்டத்தில் மொத்தம் 1,413 பேருக்கும் புது தில்லி மாவட்டத்தில் 2,577, வடக்கு மாவட்டத்தில் 3,229, வடகிழக்கு மாவட்டத்தில் 941, வடமேற்கு மாவட்டத்தில் 1,209, தெற்கு மாவட்டத்தில் 1,413, தென்கிழக்கு மாவட்டத்தில் 1,489, தென்கிழக்கு மாவட்டத்தில் 1,489, தென்மேற்கு மாவட்டத்தில் 1,961, ஷாஹத்ரா மாவட்டத்தில் 1,913, கிழக்கு மாவட்டத்தில் 809 மற்றும் மேற்கு தில்லி மாவட்டத்தில் 1,559 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com