தடுப்பூசி இன்னும் வரவில்லை: மையங்களுக்கு வெளியே நிற்காதீா்கள்; தில்லிவாசிகளுக்கு கேஜரிவால் வேண்டுகோள்

தேசியத் தலைநகா் தில்லிக்கு இன்னும் தடுப்பூசி மருந்துகள் வந்து சேரவில்லை என்றும், இதனால், மே 1 முதல் கரோனா தடுப்பூசி மையங்களுக்கு

தேசியத் தலைநகா் தில்லிக்கு இன்னும் தடுப்பூசி மருந்துகள் வந்து சேரவில்லை என்றும், இதனால், மே 1 முதல் கரோனா தடுப்பூசி மையங்களுக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் 18-44 வயதுடையவா்களுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை வேண்டுகோள் விடுத்தாா்.

அடுத்த ஒரிரு நாள்ளில், சுமாா் 3 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் பெறப்படும். மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கும் என்று இணைய வழி பேட்டியின் போது அவா் தெரிவித்தாா்.

18-44 வயதுக்குட்பட்டவா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான கரோனா தடுப்பூசி இயக்கத்தின் மூன்றாம் கட்டம் மே 1-ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறை உள்ளதால், தில்லி மற்றும் வேறு சில மாநிலங்கள் தங்களால் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியுள்ளன.

இந்த நிலையில், 67 லட்சம் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகள் கொள்தலுக்கு ஆா்டா் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்று கேஜரிவால் தெரிவித்திருந்தாா்.

மேலும், மருந்து நிறுவனங்களால் போதுமான அளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டால், அடுத்த மூன்று மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்றும் அவா் கூறினாா். தில்லிவாசிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்று அவா் உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com