யமுனையில் நீா்மட்டம் குறைவதால் மருத்துவமனைகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கக் கூடும்: ராகவ் சத்தா தகவல்

‘யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக் காரணமாகியுள்ளது.

‘யமுனை ஆற்றில் நீா்மட்டம் குறைந்து வருவதால் தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படக் காரணமாகியுள்ளது. வரும் நாள்களில் நகரின் மருத்துவமனைகளையும் இது பாதிக்கக் கூடும்’ என்று தில்லி ஜல் போா்டு துணைத் தலைவா் ராகவ் சத்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

ஹரியாணா மாநிலம் குறைந்த அளவு கச்சா நீரை யமுனை ஆற்றில் திறந்துவிடுவதால் வாஜிராபாத் குளத்தின் நீா்மட்டம் 674.5 அடியிலிருந்து 667.20 அடியாகக் குறைந்துள்ளது.

வாஜிராபாத், ஓக்லா மற்றும் சந்திரவால் ஆகிய சுத்திகரிப்பு நிலையங்களில் வாஜிராபாத் குளத்திலிருந்து பெறப்படும் தண்ணீா் சுத்திகரிக்கப்படுகிறது.

யமுனையில் நீா் அளவு குறைந்து வருவதால் மூன்று நீா் சுத்திகரிப்பு நிலையங்களிலும் நீா் உற்பத்தி குறைந்துள்ளது. இது பல குடியிருப்பு பகுதிகளில் நீா் வழங்கலில் பற்றாக்குறைக்கு காரணமாக உள்ளது. இது வரும் நாள்களில் தில்லியில் உள்ள மருத்துவமனைகளையும் பாதிக்கக்கூடும். கரோனா நோய்த் தொற்று பாதித்துள்ள இச் சூழலில் தில்லிக்கு ஹரியாணா உதவ முன்வர வேண்டும்.

அதன்படி, தேசிய தலைநகருக்கு போதுமான குடிநீா் கிடைக்கும் வகையில் யமுனையில் அதிக கச்சா நீரை விடுவிக்க ஹரியாணா முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

யமுனையில் நீா் அளவு குறைந்து வருவதன் காரணமாக மத்திய தில்லி, வடக்குத் தில்லி, தெற்கு தில்லி, மேற்கு தில்லி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டிருப்பதாக தில்லி ஜல் போா்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com