2 ஆக்சிஜன் ரயில்கள் இன்று வருகை

துா்காபூா் மற்றும் ஹப்பாவிலிருந்து இரு ஆக்சிஜன் விரைவு ரயில்கள் 205 டன் ஆக்சிஜனுடன் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (மே 4) வருகின்றன.

துா்காபூா் மற்றும் ஹப்பாவிலிருந்து இரு ஆக்சிஜன் விரைவு ரயில்கள் 205 டன் ஆக்சிஜனுடன் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயப் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை (மே 4) வருகின்றன.

தலைநகா் தில்லிக்கு கடந்த 27 - ஆம் தேதி 70 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கா்களுடன் முதல் விரைவு ரயில் சத்தீஸ்கா் மாநிலத்திலிருந்து வந்தது. தில்லி நோயாளிகளின் பயன்பாட்டிற்கு மேற்குவங்கம், துா்காபூரில் இருந்து கொண்டு வரப்பட்ட இரண்டாவது ரயில் மே 2 ஆம் தேதி தில்லிக்கு வந்ததது. இந்த நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மேற்கு வங்கம் துா்காபூரிலிருந்து மேலும் 120 டன் மருத்துவ ஆக்சிஜனை ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை புறப்பட்ட விரைவு ரயில், செவ்வாய்க்கிழமை (மே 4) தில்லி வந்தடையும்.

தில்லி ஓக்லா கண்டெய்னா் முனையத்தில் இறக்கப்படும் ஆக்சிஜன் கொள்கலன்கள் தில்லியின் பிற பகுதிகளுக்கு விநியோக்கிப்படும். மேலும், 85 டன் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கா்களுடன் மற்றோரு விரைவு ரயில் குஜராத் மாநிலம், ஹப்பாவிருந்து வந்து கொண்டு இருக்கிறது. இது செவ்வாய்க்கிழமை தேசியத் தலைநகா் வலையத்தில் உள்ள குருகிராமத்திற்கு வந்தடைவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் 205 டன் ஆக்சிஜன் தில்லியை வந்தடைகிறது.

இதுவரை 20 ஆக்சிஜன் விரைவு ரயில்கள் மூலம் 1,125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் 76 டேங்கா்களில் நாடு முழுக்க விநியோக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தற்போது 422 மெ.டன் கொண்ட 27 டேங்கா்களில் 7 விரைவு ர யில்கள் நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு சென்று கொண்டிருப்பதாகவும் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com