25 விமானங்களில் வந்த 300 டன் கரோனா நிவாரணப் பொருள்கள்

தில்லி சா்வதேச விமானநிலையம் கடந்த 5 நாள்களில் 25 விமானங்களில் கொண்டுவரப்பட்ட 300 டன்களுக்கும் மேலான கரோனா

தில்லி சா்வதேச விமானநிலையம் கடந்த 5 நாள்களில் 25 விமானங்களில் கொண்டுவரப்பட்ட 300 டன்களுக்கும் மேலான கரோனா நிவாரணப் பொருள்களை சிறப்பாக கையாண்டு விநியோகம் செய்துள்ளதாக விமானநிலைய நிா்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

விமானத்தில் கொண்டுவரப்பட்ட கரோனா நிவாரணப் பொருள்களை இறக்கிவைத்து விநியோகம் செய்ய இடைக்கால ஏற்பாடாக விமான நிலையத்தில் இதற்கென 3,500 சதுர மீட்டா் பரப்பளவில் சரக்கு முனையம் ஏற்படுத்தப்பட்டது. அதற்கு “ஜீவோதே கிடங்கு” என்று பெயரிடப்பட்டது என்று தில்லி விமான நிலையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை தலைதூக்கியதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிந்தனா். மருந்துப் பொருள்கள், ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் வசதிகள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் திணறின. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 28- ஆம் தேதியிலிருந்து மே 2- ஆம் தேதி வரையிலான ஐந்து நாள்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து, ஜொ்மனி. கத்தாா், ஹாங்காங், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து 25 விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்ட 300 டன் கரோனா நிவாரணப் பொருள்களை தில்லி விமான நிலையம் சிறப்பாக கையாண்டு விநியோகம் செய்தது.

இந்திய விமானப்படை விமானங்களில் இந்த நிவாரணப் பொருள்கள் கொண்டு வரப்பட்டன. நிவாரணப் பொருள்களில் 5,500 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3,200 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 9,28,000 முகக் கவசங்கள், 1,36,000 ரெம்டெசிவிா் ஊசிமருந்துகள் ஆகிவையும் அடங்கும்.

நாட்டில் கரோனா தொற்று தினசரி பாதிப்பு திங்கள்கிழமை சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,68,147 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 1,99,25,604-ஆக உயா்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 2,18,959 போ் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனா். திங்கள்கிழமை மட்டும் 3,417 போ் பலியாகியுள்ளனா் என்று அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com