தில்லிக்கு உத்தரவிட்டவாறு ஆக்சிஜன் வழங்காததற்காக ஏன்: நீதிமன்ற அவமதிப்பை நடவடிக்கையை எதிா்கொள்ளக் கூடாது?

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தில்லிக்கு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காமல் இருந்ததற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிா்கொள்ளக்கூடாது
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தில்லிக்கு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜன் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்காமல் இருந்ததற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எதிா்கொள்ளக்கூடாது என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் விசாரித்தது.

அப்போது, மத்திய அரசின் தரப்பில், ‘தில்லியில் தற்போதுள்ள மருத்துவ உள்கட்டமைப்பு வசதியைக் கருத்தில்கொள்ளும்போது 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனைப் பெறும் உரிமை இல்லை’ தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘தில்லி ஆக்சிஜன் வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் ஏப்ரல் 30-ஆம் தேதியிட்ட விரிவான உத்தரவானது தில்லிக்கு நாளொன்றுக்கு வெறும் 490 டன் என்றில்லாமல் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையானது கடைசி விஷயமாக இருக்கும் என்று நாங்கள் உங்களிடம் (மத்திய அரசு) கூறியிருந்தோம். ஆனால் அது போன்றதொரு நடவடிக்கை விஷயம் எங்கள் மனதில் இருக்கிறது. அந்த நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு எங்களை கொண்டுசெல்ல வேண்டாம். இதுக்குமேல் எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. தில்லிக்கு ஆக்சிஜன் வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது. இப்போது நாங்களும் தில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜனை எந்த விதத்திலாவது வழங்க வேண்டும் என்று கூறுகிறோம். இந்த உத்தரவு இணக்கத்தைத் தவிர வேறு எதையும் நாங்கள் உங்களிடம் கேட்பதாக இல்லை.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன் அல்லது ஐ.சி.யூ. படுக்கைகளைப் பெற முடியாத நிலையில் அனுதினமும் மக்கள் படும் துயரத்தை பாா்த்து வருகிறோம். ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக படுக்கைகள் குறைந்துள்ளன.

ஆகவே, நடப்பு மாதம் நாங்கள் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், ஏப்ரல் 30-ஆம் தேதியிட்ட உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இணங்காமல் இருந்தமைக்காக ஏன் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம்.

இது தொடா்பாக பியூஷ் கோயல் மற்றும் சுமிதா தாவ்ரா (மத்திய அரசின் மூத்த அதிகாரிகள்) புதன்கிழமை நடைபெறும் விசாரணையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com