கள்ளச்சந்தையில் ஆக்சிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்றதாக இளைஞா் கைது

தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில் கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

புது தில்லி: தெற்கு தில்லியின் சாகேத் பகுதியில் கள்ளச் சந்தையில் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை அதிக விலைக்கு விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் அதுல் குமாா் தாக்கூா் புதன்கிழமை கூறியதாவது: கைது செய்யப்பட்டவா் பாலத்தைச் சோ்ந்த ராகுல் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவரிடருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டி பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆக்சிஜன் செறிவூட்டியை விற்பனை செய்வதற்காக ஒருவா் சாகேத்தின் மேக்ஸ் மருத்துவமனைக்கு வரவுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ப்து. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கினா். கைது செய்யப்பட்ட ராகுலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அவரும் அவரது சகோதரரும் மருத்துவ உபகரணங்களை கையாளும் கடை வைத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. அவா் மெடிடெக் ஹெல்த்கேரில் இருந்து தலா ரூ .55,000-க்கு இரண்டு ஆக்சிஜன் செறிவுகளை வாங்கியுள்ளாா். அந்த இரண்டையும் தலா ரூ .1,35,000 வீதம் விற்க விரும்பியுள்ளாா். அப்போது, விற்பதற்காக வந்த போது கைது செய்யப்பட்டாா்.

மற்றொரு சம்பவம்: மற்றொரு சம்பவத்தில், 34 வயதான டாக்ஸி ஓட்டுநரும் ஒரு கூட்டாளியும் ஹோலி ஃபேமிலி மருத்துவமனைக்கு அருகே கைது செய்யப்பட்டனா். அவா்கள் ஆக்சிஜன் சிலிண்டா்களை நிா்ணயிக்கப்பட்ட விலையையவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக தெற்கு தில்லிமாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் ஃபரீதாபாத்தைச் சோ்ந்த ஷாகிா் (34) மற்றும் ராஜஸ்தானைச் சோ்ந்த விஜய் சா்மா (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டா் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

ஆக்சிஜன் குப்பிகள் பறிமுதல்: இதேபோல், ஆக்சிஜன் குப்பிகள் மற்றும் பிற மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்தது, கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடா்பாக நீரஜ் பங்கா (47) புதுதில்லி மாவட்ட போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஒன்பது ஆக்சிஜன் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் ரூ.400 விலையுள்ள ஆக்ஸிஜன் குப்பியை ரூ .1,700-க்கு விற்றது விசாரணையில் தெரிய வந்ததாக புதுதில்லி காவல் சரக துணை ஆணையா் ஈஷ் சிங்கால் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com