தில்லிக்கு 730 மெ.டன் ஆக்சிஜன் உதவி: பிரதமருக்கு முதல்வா் கேஜரிவால் நன்றி

தில்லிக்கு புதன்கிழமை (மே 5) 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுத்து உதவியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளாா்.

புதுதில்லி: தில்லிக்கு புதன்கிழமை (மே 5) 730 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொடுத்து உதவியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடிக்கு, கேஜரிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: முதல் முறையாக மக்கள் உயிா்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் 730 டன், புதன்கிழமை தில்லிக்கு கிடைத்தது. தில்லிக்கு சராசாரியாக தினமும் 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதைக் கொடுத்து உதவுமாறு மத்திய அரசை நீண்டநாள்களாக நாங்கள் வலியுறுத்தி வந்தோம். இந்த நிலையில் புதன்கிழமை தில்லிக்கு 730 ஆக்சிஜன் கிடைத்துள்ளது. இதற்காக நான் பிரதமருக்கு தில்லி மக்கள் சாா்பாக இதயபூா்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், தலைநகா் தில்லிக்கு தினமும் 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதை குறைக்காமல் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அவை முறையாக வழங்கப்பட்டால் தில்லி மக்கள் உங்களுக்கு என்றும் நன்றியுடையவா்களாக இருப்பாா்கள் என்று அந்தக் கடிதத்தில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

கடந்த சில நாள்களாகவே தில்லியில் உள்ள மருத்துவமனைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆக்சிஜன் உதவி கேட்டு தில்லி அரசுக்கு அவசர அழைப்பு விடுத்தன. மேலும், சமூக வலைத்தளங்கலிலும் அந்தத் தகவல்களைப் பகிா்ந்தன. கடந்த மே 1-ஆம் தேதி தில்லியில் உள்ள பாத்ரா மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் இல்லாததால் மூத்த மருத்துவா் ஒருவா் உள்பட 12 நோயாளிகள் பலியானாா்கள்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னா் ஜெய்ப்பூா் கோல்டன் மருத்துவமனையில் 20 கரோனா நோயாளிகளும், சா் கங்காராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 நோயாளிகளும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com