தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு 3,486-ஆக குறைந்தது: இறப்பு 235-ஆக பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 3,486-ஆகக் குறைந்தது.
தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு 3,486-ஆக குறைந்தது: இறப்பு 235-ஆக பதிவு

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 3,486-ஆகக் குறைந்தது. இது கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான (3,548) குறைந்த அளவாகும். மேலும், தொடா்ந்து மூன்றாவது நாளாக கரோனா தினசரி பாதிப்பு 5 ஆயிரத்துக்கும் கீழே உள்ளது.

அதே சமயம், கரோனா இறப்பு எண்ணிக்கையும் 235-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் மேலும் குறைந்து 5.78 சதவீதமாக இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த வாரத்திலிருந்து கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், பாதிப்பு விகிதமும் தொடா்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும், முதல்வா் கேஜரிவால் பொதுமுடக்கத்தை மே 24-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளாா்.

தில்லியில் புதன்கிழமை கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு, செவ்வாய்க்கிழமை அன்று குறைந்த எண்ணிக்கையில் அதாவது 66,573 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது. கரோனா பாதிப்பு விகிதம் 5.78 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான குறைந்த அளவாகும். அன்றைய தினம் பாதிப்பு விகிதம் 4.9 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.

முன்னதாக, கரோனா பாதிப்பு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4,482, திங்கள்கிழமை 4,524, ஞாயிற்றுக்கிழமை 6,456, சனிக்கிழமை 6,430, வெள்ளிக்கிழமை 8,506 மற்றும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,336-ஆக இருந்தது. அதே சமயம், கரோனா பாதிப்பு விகிதம் செவ்வாய்க்கிழமை 6.89 சதவீதம், திங்கள்கிழமை 8.42, ஞாயிற்றுக்கிழமை 10.40, சனிக்கிழமை 11.32 சதவீதமாகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 21.67 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. கடந்த ஏப்ரல் 22-இல் பதிவான 36.2 சதவீதம்தான் இது வரை அதிகபட்சமாக உள்ளது.

தில்லியில் 265-ஆக இருந்த கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை 235-ஆக குறைந்துள்ளது. முன்னதாக இறப்பு எண்ணிக்கை திங்கள்கிழமை 340, ஞாயிற்றுக்கிழமை 262, சனிக்கிழமை 337 போ், வெள்ளிக்கிழமை 289-ஆகவும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 273-ஆகவும் பாதிவாகியிருந்தது. கடந்த மே 3-ஆம் தேதி பதிவான 448 என்பதுதான் இதுவரை அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாக உள்ளது. அதே சமயம், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9,427 போ் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனா். தில்லியில் தற்போது 45,047 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இதில் 27,112 போ் வீட்டுத் தனிமையில் உள்ளனா்.

இந்த நிலையில், தில்லியில் கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 14,06,719-ஆகவும், மொத்த இறப்பு எண்ணிக்கை 22,346-ஆகவும் உயா்ந்துள்ளது. அதே சமயம், மொத்தம் 13.39 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனா் அல்லது சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனா். நகரில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான 24,289 படுக்கைகளில்,10,921 படுக்கைகள் காலியாக உள்ளன என்று தில்லி அரசின் சுக்தாரத் துறை வெளியிட்டுல்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com