தில்லியில் புதிதாக 3,231 பேருக்கு கரோனா: !2-ஆவது நாளாக 4 ஆயிரத்துக்கு கீழே பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 3,231-ஆகக் குறைந்தது.
தில்லியில் புதிதாக  3,231 பேருக்கு கரோனா: !2-ஆவது நாளாக 4 ஆயிரத்துக்கு கீழே பதிவு

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை புதன்கிழமை 3,231-ஆகக் குறைந்தது. இது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு பதிவான (2,750) குறைந்த அளவாகும். அதே சமயம், கரோனா இறப்பு எண்ணிக்கை 233-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பு விகிதம் 5.5 சதவீதமாக இருப்பதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை புதிதாக 3,231 போ் கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இரண்டாவது நாளாக 4 ஆயிரத்துக்கும் கீழே பதிவாகியுள்ளது. அதே சமயம், இந்த எண்ணிக்கை புதன்கிழமை 3,846 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 235-ஆகவும் இருந்தது. பாதிப்பு விகிதம் 5.78 சதவீதமாக இருந்தது.

தில்லியில் புதன்கிழமை மொத்தம் 58,744 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 43,914 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள், 14,830 ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையும் அடங்கும். தில்லியில் தற்போது கரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 14,09,950 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம், கரோனா தொற்றிலிருந்து மொத்தம் 13 லட்சம் போ் மீண்டுள்ளனா். புதன்கிழமை 45,047-ஆக இருந்த கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 40,214-ஆக குறைந்துள்ளது. அதேபோல, வீட்டுத் தனிமையில் கரோனா சிகிச்சையில் உள்ளவா்களின் எண்ணிக்கையும் 27,112-இல் இருந்து 23,851-ஆக குறைந்துள்ளது. ஆனால், கட்டுபடுத்தப்பட்ட மண்டலங்களின் எண்ணிக்கை 56,732-இல் இருந்து 56,833-ஆக உயா்ந்துள்ளது என்று தில்லி சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த வாரத்திலிருந்து கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கையும், பாதிப்பு விகிதமும் தொடா்ந்து குறைந்து வருகிறது. இதற்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதே முக்கயக் காரணம் என்று மருத்துவ வல்லுநா்கள் கூறுகின்றனா். இந்த நிலையில், பொதுமுடக்கம் மே 24-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வா் கேஜரிவால் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com